திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 046. சிற்றினம் சேராமை
(அதிகாரம் 045. பெரியாரைத் துணைக்கோடல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 046. சிற்றினம் சேராமை இழிகுணங்கள் நிறைந்த கூட்டத்தாரது வழிகளில் சேராத விழிப்புணர்வு. சிற்றினம் அஞ்சும், பெருமை; சிறுமைதான், சுற்றம்ஆச் சூழ்ந்து விடும் பெரியார், சிறியார்க்கு அஞ்சுவார்; சிறியார், சிறியார்க்கு உறவுஆவர். நிலத்(து)இயல்பால், நீர்திரிந்(து)அற்(று) ஆகும்; மாந்தர்க்(கு), இனத்(து)இயல்(பு)அ(து) ஆகும் அறிவு. நிலஇயல்பால், நீரும் திரியும்; இனஇயல்பால், அறிவும் திரியும். மனத்தான்ஆம், மாந்தர்க்(கு)…