சுந்தரச் சிலேடைகள் 3. இதயமும் கடிகாரமும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சுந்தரச் சிலேடைகள் இதயமும் கடிகாரமும் துடித்திடும், உள்ளிருக்கும், தூங்காமல் ஓடும், வடிக்க அழகூட்டும், வாழ்வில்-படியாத மாந்தருக்கும் பாங்காகும் மாகடி காரமும் , சாந்த இதயமும் சான்று. பொருள்: இதயம் 1)இதயம் துடிக்கும் 2) உயிர்களின் உடலுக்கு உள்ளே பாதுகாப்பாக அமைந்திருக்கும். 3) நாம் தூங்கினாலும் அதுதூங்காமல் இயங்கிக் கொண்டிருக்கும். 4) வரைந்து பார்த்தால் அழகாக இருக்கும். 5) படித்தவர், படியாதவர் என்ற பேதமின்றி அனைவருக்கும் அமைந்திருக்கும். கடிகாரம் 1) துடிக்கும் 2) கண்ணாடிக்குள் இருக்கும். 3) தூங்காமல் ஓடும் 4) வரைந்து…

சுந்தரச் சிலேடைகள் – மாணவரும் ஆடும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சுந்தரச் சிலேடைகள் மாணவரும் ஆடும் சிலேடை 1 அடைந்திருக்கும் ஓரிடத்தில் ஆளின்றேல் தாவும் கடைநிலையிற் கொம்படிக்கும் கத்தும்-இடைநின் றிழுக்க அசைபோட் டிறுதி விருந்தாம் எழுத்தறி வானாட்டுக் கீடு. பொருள் மாணவர்=வகுப்பறையில் அனைவரும் இருப்பர். ஆசான் இல்லாதபோது இங்குமங்கும் விளையாடுவர். படிக்காத கடை மாணவர் கொம்பால் அடிவாங்குவர். பள்ளிவராமல் உள்ளோர் சகமாணவர்களால் இழுத்து வரப்படுவர். அழுவர். கற்றதை அசைபோடுவர்.பின்னாளில் நல்ல விருந்தளிப்பர். ஆடு=கொட்டகையில் அடைந்து கிடக்கும். ஆளில்லை என்றால் இங்குமங்கும் தாவும் சேட்டை செய்யும் , சண்டையிடும் , கொம்பால் முட்டிக்கொள்ளும்.இடையிலே நின்றுபோனால்…