(உ.வே.சா.வின் என் சரித்திரம் 69 : ஒரு செய்யுள் செய் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-42 சிலேடையும் யமகமும் பட்டீச்சுரத்தில் இருந்தபோது பிள்ளையவர்கள் இடையிடையேகும்பகோணம் முதலிய இடங்களுக்குப் போய் வருவதுண்டு. அப்பொழுதுநானும் உடன் சென்று வருவேன். பட்டீச்சுரத்திலுள்ள ஆலயத்திற்கு ஒருநாள்சென்று தரிசனம் செய்து வந்தோம். அக்கோயிலில் தேவி சந்நிதானத்தில் சிரீகோவிந்த தீட்சிதரது பிம்பமும் அவர் பத்தினியாரது பிம்பமும் இருக்கின்றன.அவற்றை நாங்கள் கண்டு களித்தோம். தஞ்சையிலிருந்து அரசாண்ட அச்சுதப்பநாயக்கரிடம் அமைச்சராக இருந்து பல அரிய தர்மங்களைச் செய்தவர் சிரீகோவிந்த தீட்சிதர். அவர் பட்டீச்சுரத்து அக்கிரகாரத்தில் வசித்து…