தன்மதிப்புப் பகுத்தறிவாளர் சிவகங்கை இராமச்சந்திரன் – செங்கோ
தன்மதிப்புப் பகுத்தறிவாளர் சிவகங்கை இராமச்சந்திரன் மருதிருவர் மண்ணிலே… சிவகங்கை இராமச்சந்திரன் (புரட்டாசி 02, 1915)16.09.1884இல் பிறந்து (மாசி 15, 1964)26.02.1933 இல் மறைந்த திராவிடர் இயக்கத் தன்மதிப்புப் பகுத்தறிவாளர். 1929இல் செங்கற்பட்டு மாநில தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்க மாநாட்டில் பங்கு பெற்று, பெரியார் பாதையில் தம் சாதி ஒட்டினை நீக்கி, “சிவகங்கை இராமச்சந்திரன் சேர்வை ஆகிய நான், இன்றுமுதல் சிவகங்கை இராமச்சந்திரன் என்றே அழைக்கப்படுவேன்” என்று சூளுரைத்துச் சாதியைத் துறந்தவர். ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட பெருந்தகையாளர். இரவுநேரப் பள்ளிகளைத் தொடங்கி, அந்த உழைக்கும்…
மூவாப்புகழ் மூவர் சிறப்பிதழ்
அகரமுதல 44 ஆம் இதழ் மூவாப்புகழுக்குரிய ஆன்றோர் மூவர் சிறப்பிதழாக வருகிறது. எனவே, வழக்கமான செய்திகளுடன் இம் மூவர் குறித்த படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.(இவ்விதழில் விடுபட்ட தொடர்கள் அடுத்த இதழில் வெளிவரும்.) செட்டம்பர்த் திங்களின் இவ்வாரத்தில் இதனைக் குறிப்பதால் யார் அந்த மூவர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆம்! பாட்டுக்கொரு புலவனாய் நமக்கு எழுச்சி யூட்டும் மாக்கவி பாரதியார் (பிறப்பு: ஆவணி 28, 1913 / திசம்பர் 11, 1882 – மறைவு: கார்த்திகை 26,1954 / செட்டம்பர் 11,…
சிவகங்கை இராமச்சந்திரனாரின் சீர்மிகு பணிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே நம் மொழியும் இனமுமாகும். ‘திராவிடம்’ என்பது மொழியுமல்ல; இனமுமல்ல. ஆனால், ‘தமிழ்’ என்னும் சொல் ‘திராவிடம்’ என்று மாறியுள்ளது. ‘திராவிடம்’ என்பது மொழியைக் குறிப்பிடுகையில் தமிழ்க்குடும்ப மொழிகளைக் குறிப்பிடுகிறது; இனத்தைக் குறிப்பிடுகையில் தமிழ்க்குடும்ப இனங்களைக் குறிப்பிடுகிறது. அதே நேரம் இயக்கத்தைக் குறிப்பிடுகையில், ஆரிய மூட நம்பிக்கைகளை அகற்றும், தமிழின் அருமை பெருமைகளை உணரச் செய்யும், தன் மதிப்பில் வாழ அறிவுறுத்தும், பகுத்தறிவை நாடச் சொல்லும் குறியீடாகத் திராவிடம் வழங்குகிறது. எனவே, ‘திராவிடம்’ என்று குறிக்கும் பொழுது தமிழரல்லாத பிற தமிழ்க்குடும்ப இனத்தவரை…