இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 08: ம. இராமச்சந்திரன்
(அகரமுதல 105 ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி) 8 பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றிய கவிஞர்கள் அனைவரும் தமிழ் மொழியின் சிறப்பையும் மறுமலர்ச்சியையும் சமூகச் சீர்திருத்தத்தையுமே தம்முடைய கவிதைக்குக் கருப்பொருளாகக் கொண்டார்கள். எடுத்துக்காட்டாக புலவர் குழந்தை, இ.மு. சுப்பிரமணியபிள்ளை, சாமி. சிதம்பரனார், வாணிதாசன், ச. பாலசுந்தரம் ஆகியோர் எழுதிய கவிதைகளைக் குறிப்பிடலாம். புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம்’ என்ற மிகப் பெரிய செய்யுள் நூலை எழுதி பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள். இராவண காவியம் கம்பன் கவிக்கு…
இலக்குவனாரைப் பயன்படுத்தத் தெரியாத அரசு – சிவகாமி சிதம்பரனார்
இலக்குவனாரைப் பயன்படுத்தத் தெரியாத அரசு பேராசிரியர் சி.இலக்குவனார், கொள்கையிலும் மொழிப் பற்றிலும் பிடிவாதமான உறுதி வாய்ந்தவர். அஞ்சா நெஞ்சுடையவர். கடைசிக் காலம் வரை எதிர்ப்பில் போராடியவர். கொள்கைக்காகத் தம் ஆசிரியப் பணியையும் விட்டார். கொள்கைப் பிடிவாதத்தால் குடும்பத்துடன் துன்பப்பட்ட காலங்களும் நிரம்ப உண்டு. எக்கட்சி ஆளுங்கட்சியாய் இருந்தாலும் அரசுக்கு அவ்வப்போது இடித்துரை கூறத்தவறுவதில்லை. இதனால் பலமுறை பணிமாறுதல்களையும் சந்தித்த பெருமையுடையவர். தம் பிழைப்புக்காக ஒரு போதும் கொள்கையை விட்டுக் கொடுக்காத பேராண்மை படைத்தவர். சென்னையில் வாழ்ந்த போது, பல தமிழ் இலக்கியம் கூட்டங்களை…