சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9 : பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 8 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9 பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்! “செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான “  (தொல்காப்பியம், பொருளதிகாரம், பொருளியல், நூற்பா 15) “செறிவு என்பது அடக்கம்; நிறைவு என்பது அமைதி; செம்மை என்பது மனங்கோடாமை; செப்பு என்பது சொல்லுதல்; அறிவு என்பது நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் துணிதல்; அருமை என்பது உள்ளக் கருத்து அறிதலருமை” என்று இளம்பூரணர் உரை வகுத்துள்ளார். செப்பும் என்பதற்குக் கூறத் தகுவன கூறலும் என்கிறார் பேரா.முனைவர்…

குறள் கடலில் சில துளிகள் . 25. உன்னையே வியந்து கொள்ளாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

( குறள் கடலில் சில துளிகள் 24. கஞ்சத்தனத்தை என்றும் எண்ணாதே! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 25. உன்னையே வியந்து கொள்ளாதே! வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.  ( திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், எண்: ௪௱௩௰௯ – 439) பொழிப்பு: எப்பொழுதும் தன்னை வியந்து கொண்டாடாதே; நன்மை தராத செயல்களை மனத்தாலும் விரும்பாது ஒழிக! (சி.இலக்குவனார்) பதவுரை: வியவற்க-வியந்து கொள்ளற்க, பெருமிதம் கொள்ளற்க, புகழ்ந்து கொள்ளற்க; எஞ்ஞான்றும்-எப்பொழுதும்; தன்னை-தன்னை; நயவற்க-விரும்பாதீர்; நன்றி-நன்மை; பயவா-விளைக்காத; வினை-செயல்….

குறள் கடலில் சில துளிகள் 23. நல்லன செய்யாது செல்வத்தை அழிக்காதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 22. உன்னைத் திருத்திய பின் ஊரைத் திருத்து! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 23. நல்லன செய்யாது செல்வத்தை அழிக்காதே! செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், குறள் எண்:  ௪௱௩௰௭ – 437) நல்ல செயல்களுக்குப் பயன்படுத்தாதவன் செல்வம் பயனின்றி அழியும் என்கிறார் திருவள்ளுவர். பதவுரை: செயல்பால-செய்யவேண்டியவை; செய்யாது-செய்யாமல்; இவறியான்-(மிகையான பொருட்) பற்றுக்கொண்டு அதைச் செலவழிக்காதவன், கருமி; செல்வம்-பொருள்; உயல்பாலது-மீட்கத்தக்கது, உய்யுந்தன்மை, தப்புதலுக்குரியது, உளதாகுதல், ஒழிக்கத்…

முதல்வர் தாலின் அவர்களே! ஆங்கிலக் காதலைக் கைவிடுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள் – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  26 தொடர்ச்சி) முதல்வர் தாலின் அவர்களே! ஆங்கிலக் காதலைக் கைவிடுங்கள்! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  27 மாண்புமிகு முதல்வர் அவர்களே! நீங்கள், தமிழ், தமிழர் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொழுது “இது தமிழை, தமிழினத்தைக் காக்கும் ஆட்சி” என்று பேசுகிறீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது. சான்றாக, வடஅமெரிக்கத் தமிழர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு உரையாற்றியபொழுது (சூலை 2022) “தமிழ் மொழிக்கு முதன்மைத்துவம் தருவதோடு, தமிழினத்தைக் காக்கும் ஆட்சியாகவும் நடந்து…

இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள் – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  26 – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 25 – ஆட்சி நிலைக்கத் தமிழை நிலைக்கச் செய்வீர்! – தொடர்ச்சி) இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள் தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.தாலின், “தமிழ்நாடு சொல் அல்ல! தமிழரின் உயிர்!” என அருமையாகக் கூறியுள்ளார். பாராட்டுகள்! ஆனால் அந்த உயிர் குற்றுயிரும் குறையுயிருமாக உள்ள வேதனையை யாரும் உணரவில்லை. தமிழரின் வாழ்க்கை மொழியாகத் தமிழில்லை. கல்வி மொழியாகவோ வழிபாட்டு மொழியாகவோ சடங்கு மொழியாகவோ வேலை வாய்ப்பு மொழியாகவோ ஆராய்ச்சி மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ அன்றாடப் பயன்பாட்டு மொழியாகவோ…

இந்தி கலந்து எழுதுவோரை இருட்சிறையில் தள்ளிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தி கலந்து எழுதுவோரை இருட்சிறையில் தள்ளிடுக!  “சமையல் குறிப்பாளர்களைத் தூக்கிலிடுக” என்று எழுத எண்ணினேன். அத்தகைய கடுஞ்சினத்திற்குக் காரணம் சமையல் குறிப்பு என்ற பெயரில் சமையல் பொருள்களை எல்லாம் இந்திச் சொற்களாலேயே குறிப்பிடுகின்றனர். . . . . . . . . . . . . . . . . . . எடுத்துக் காட்டிற்குச் சில குறிப்புகளைப் பார்ப்போம். “சுகர் பேசண்ட்சு”  “முளைத்த கிராம்சு, பச்சை மூங் பருப்பு”  “முளைத்த மேத்தி முளைத்த கிராம்சு”,  “முளைத்த மேத்தி…

தமிழர் பண்பாடு –– சி.இலக்குவனார்

 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  19 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  20 10. பண்பாடு நல்லாட்சியின்கீழ்க் கல்வி முதலியன பெற்று இல்லற வாழ்வில் சிறந்து கடவுளுணர்வுடையராய் மெய்யுணர்ந்த மக்கள் பண்பாட்டில் உயர்ந்தோராய் இருந்திருப்பர் என்பதில் ஐயமின்று. ‘பண்புடைமை’யே மக்களை மாக்களினின்றும் பிரித்து உயர்த்துவதாகும்.  பண்படுத்தப்படும் வயல் நல்ல விளையுளைத் தருதல் போன்று பண்படுத்தப்படும் உள்ளமும் உலகிற்கு உயர் பயனை நல்கும்.  பண்புடையாளரால்தாம் உலகம் வாழ்கின்றது என்று திருவள்ளுவர் தெளிவுறக் கூறியுள்ளார். “பண்புடையார்ப் பட்டுண் டுலகம்;…

தமிழர் மெய்யுணர்வுக்கொள்கை (தொடர்ச்சி)-சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  18 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  19 9. மெய்யுணர்வுக் கொள்கை (தொடர்ச்சி) “பொருள்நிலை சீருறின் உலகப் பொல்லாங்கு எல்லாம் ஒழியும்” எனும் பொருளுரையைப் போற்றாதார் தம்மைப் போற்றாதாரே.  எனவே, இதனை நன்கு வற்புறுத்தினர் சங்க காலப் பெரியோர்கள். “ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச்  செய்வினைக் கைம்மிக எண்ணுதி”                          (குறுந்தொகை-63) “இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்  அசையுநர் இருந்தோர்க்கு அரும்புணர்வு இல்”                   (நற்றிணை-214) என உழைத்துப் பொருளீட்டாதார்க்கு…

தமிழர் கடவுட் கொள்கை – சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  16 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  17 8.கடவுட் கொள்கை சங்ககாலத் தமிழ் மக்கள் உயர்பண்பாடு உடையவர்கள் என்பதனை அவர்கள் கொண்டிருந்த கடவுட் கொள்கையும் நன்கு நிறுவும். ‘கடவுள்’ என்னும் சொல்லே அவர்கள் கடவுளைப்பற்றிக் கொண்டிருந்த கருத்தினை நன்கு விளக்கும். ‘கடவுள்’ என்றால் “உள்ளத்தைக் கடந்தது” என்பதாகும்.  உள்ளத்தாலும் உணர இயலாத இயல்பினது ‘கடவுள்’ என்பதுதானே கடவுளைப்பற்றிய உண்மைக் கொள்கையாகும்.  இதனை நன்கு தெளிந்திருந்தனர் என்பதனைக் கடவுள் எனும் சொல்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 48, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 48 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை  (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 414) அறிவு நூல்களைக் கற்கும் வாய்ப்பை இழந்தாலும் அவ்வாறு கற்றவர்களிடம்  கேட்டறிக! இது தளர்ச்சியின் பொழுது ஊற்றுநீர்போல் பெருகித் துணை நிற்கும் என்கிறார் திருவள்ளுவர். தயான்னே சில்லிங்கு(Dianne Schilling) முதலான கல்வியாளர்கள்…

1 2 6