(தோழர் தியாகு எழுதுகிறார் 141 : மகிழவன் நினைவுகள்! கனவுகள்! தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தமிழ்நாடு இனி தொடர் அரசியல் வகுப்பில் தொடர்ந்து கலந்து கொள்கிறவரா நீங்கள்? அண்மையில் இந்த வகுப்பில் தமிழ்நாட்டில் அச்சுப் பணியின் முன்னோடிகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவ்வகையில் திரு சி.வை.தாமோதரம் பிள்ளையின் பெயரைக் குறிப்பிட்டேன். தொடர்ந்து நம் இணைய வகுப்பில் கலந்து கொள்கிறவரான அபுதாபியைச் சேர்ந்த முதுநிலைப் பொறியாளர் சிங்கை கவிதா சோலையப்பன் தாழி அன்பரும் ஆவார். அவர் திரு சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றை…