சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி
சீன வானொலி தொகுத்துள்ள “சீனம்-அன்னிய மொழி கலைச்சொல் அகராதிகள்” எனத் தமிழ், இந்தி, நேபாளம் முதலான 18 மொழி கலைச்சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்ததாகச் சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி விளங்குகிறது. வீட்டு வசதி, பொழுதுபோக்கு , பண்பாடு, கலை, பொது பாதுகாப்பு, சுற்றுச்சூழல், காப்புறுதி, நிதி, நாணயம், சந்தை ஆகிய துறைகளைச் சேர்ந்த 27ஆயிரம் சொற்கள், சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதியில் தொகுக்கப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சீன வானொலி தமிழ்ப் பிரிவின் தலைவர் கலைமகள் தொகுத்த இந்த அகராதி, தமிழ்ப் பிரிவின் முதல் சீனம்-தமிழ் கலைச்சொல்…
சீனத் தமிழ் வானொலி பொன்விழா போட்டி – அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 பரிசுகள்!
சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் முதல் நாள் தொடங்கியது. 1963-2013 ஆகசுட்டுஉடன் 50 ஆண்டுகள் நிறைவெய்துவதைச் சிறப்பாகக் கொண்டாடும்வகையில் சீன வானொலித் தமிழ் பிரிவு பல்வேறு போட்டிகளை நடத்தியது. இந்தப் போட்டிகளில் உலக வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் ஆர்வமுடன் பங்கேற்றனர். பொன்விழா கட்டுரைப் போட்டி, ஊடக போட்டிகள், பொது அறிவுப் போட்டி என்று நடத்தியது. பொன்விழப் போட்டிக்கான முதல் பரிசை அமெரிக்கா வாழ் தமிழரான ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ பெற்றுள்ளார். பொன் விழா கட்டுரையின் ஊடகப் பரிசான சிறப்புப்…