சுட்டுரைகளில் நெடுவாசல்! – இ.பு.ஞானப்பிரகாசன்
சுட்டுரைகளில் நெடுவாசல்! புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசல் பகுதி முதற்கொண்டு இந்தியா முழுக்க 31 இடங்களில் மண்ணுக்கு அடியிலிருந்து நீரகக் கரிமம் (Hydro Carbon) எடுக்கத் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது நடுவணரசு. தரையைக் குடைந்து ஆயிரக்கணக்கான அடிகளுக்கு ஆழ்துளையிட்டு, பல்வேறு வேதிக்கலவைகளைச் செலுத்தி அங்கிருக்கும் எண்ணெய் / இயற்கை எரிவளியை எடுப்பதன் மூலம் குறிப்பிட்ட பகுதி முழுவதையும் வாழத்தகாத இடமாக மாற்றிவிடக்கூடிய இந்தத் திட்டத்துக்கு எதிராகக் கடந்த 15 நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள் நெடுவாசல் பகுதி மக்கள்….
பதிவர்களுக்குப் பத்துக்கட்டளைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
வலைத்தளப் பதிவர்களுக்கும் பகிர்வர்களுக்கும் வேண்டுகோள்! முகநூல்(Facebook), காணுரை(whats-app), சுட்டுரை(Twitter), வலைப்பூக்கள், கருத்தாடல் குழுக்கள் (மின்னஞ்சல்கள் வழியாகக் குழுக்களுடன் தொடர்பு கொள்ளல்) முதலியனவற்றில் பதிவு மேற்கொள்வோரும் பிறரது பதிவுகளைப் பகிர்வோரும் தமக்குத்தாமே கட்டுப்பாடு வகுத்துக்கொண்டு பதிவு அல்லது பகிர்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உண்மையைத் தன்மையை ஆய்ந்து பதிவிடுக! பொதுவாகச் செய்திகளை முந்தித் தரவேண்டும் என்ற ஆர்வத்தில், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் பதிந்து விடுகின்றோம். சான்றாக யாருக்காவது உடனடியாகக் குருதித் தேவை எனச் செய்தி வரும். உடனே நாம் உதவும் நோக்கில் பிறருக்குப்…