இனிது இயற்கைக் குளியல் -சுதாகர்
இனிது இயற்கைக் குளியல் இனிக்கும் இன்பக் குளியல் இனிது இயற்கைக் குளியல் குளம், ஏரிக் குளியல், உளம் விரும்பும் குளியல்; உள்ளங் கால் தொட்டதும், உள்ளம் உடம்புள் துள்ளும்; உடல் முழுதும் சிலிர்க்கும்; உடல் நீரில் மூழ்கப், பற்கள் வாத்திய மாக பண் ணொன்று பிறக்கும்; இழுத்து பிடித்த உணர்வை, ஓடை இழுத்துக் கொண்டு ஓடும்; குழந்தை மனம் ஓங்கும், அக்கம் பக்கம் மறக்கும், பரவசம் பிறக்கும்; நீரில் உள்ள வரை நிலைக்கும், நிலை குலைய வைக்கும்; உடல் மிதக்கும் வரை உள்ள சுகம்…