சுந்தரச் சிலேடைகள் 17 : பெண்மகளும் பெட்டகமும் – ஒ .சுந்தரமூர்த்தி

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 17 பெண்மகளும் பெட்டகமும்   வாய்மூடிக் கொள்ளுமே, வாய்திறக்க முத்துதிர்க்கும் தூய்மை தனைநாடும், நல்சுமக்கும் – ஏற்புறப் பல்நிலை தானிருக்கும் பாதரு காரிகையே ! வெல்மகளும் பெட்டகமாய் வீடு.  பொருள்: பெண் மகள்: | ) தேவைப்படும் நேரத்தில் அளவாகப் பேசிவிட்டு வாயை மூடிக் கொள்வர். 2) வாய் திறந்தால் வெண்முத்துகளாய்ப் பற்கள் ஒளிரும் . 3) தூய்மையாக இருப்பார்கள். 4) குடும்பப் பொறுப்பை உணர்ந்து குடும்பத்தைத் தாங்கும் தூணாக இருப்பர். 5) பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை…

சுந்தரச் சிலேடைகள் 16: மங்கையும் கங்கையும் – ஒ.சுந்தரமூர்த்தி

  சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 16 மங்கையும் கங்கையும் சடைமே லிருக்கும், சனிநீரு முண்டாம் மடைமையுந் தண்ணளியாய் மண்டும் .- நடையழகாம் நானிலத்தில் நற்றமிழ்வாழ் நற்கங்கை வானிலவாள் மங்கைக்கே ஒப்பு . பொருள் 1) சிவன் சடைமேலிருந்து கங்கை வருகிறது பெண்களுக்கு கூந்தலில் போடப்பட்ட சடை தலைமேல் இருக்கிறது . 2) சனி நீர்  – ஊற்று நீர் கங்கையிலும் நீர் ஊற்று இருக்கிறது பெண்களின் கண்களிலும் நீர் ஊற்று இருக்கிறது . 3) கங்கை நீர் வெளிச்செல்ல மடைகள் உண்டு ….

சுந்தரச் சிலேடைகள் 14. நங்கையும் நாணலும் – ஒ.சுந்தரமூர்த்தி

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 14 நங்கையும் நாணலும் கொண்டையதோ வெண்பூக்கள் கொண்டிருக்கும், நாடலுறும் கெண்டைகளும் உள்ளிருக்கக் கேள்வியெழும் –  பண்டையரின் பாவிருக்கும், பங்கமிலாப் பண்பிருக்கும், பெண்ணினத்தைக் காவிருக்கும் நாணலெனக் காட்டு . பொருள் – நங்கை பெண்கள் தலைவாரிக் கொண்டையிட்டுப் பெரும்பாலும் வெண்பூக்களைச் சூடிக் கொள்வார்கள். விரும்பத் தகுந்த புருவத்திற்குக் கீழே இமைகளின் காவற்கு உள்ளே கெண்டை மீனையொத்த கண்கள் பல கேள்விகளை அசைவில் கேட்கும். பண்டை இலக்கியங்களில் பெண்ணின் பெருமை போற்றாத புலவர்களே இல்லை. பெண் மென்மையானவள்;  நல்ல பண்பு நலன்களைக்…

சுந்தரச் சிலேடைகள் 12 வில்லம்பும் புருவக்கண்ணும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 12 வில்லம்பும் புருவக்கண்ணும் வளைந்திருக்கும் ,கூர்முனியோ வஞ்சிக்கத் தாவும், களைப்புற்றோர் மீளவழி  காட்டும் – திளைப்புதரும், விண்ணோரும், மண்ணோரும் வீதிதனில் சண்டையிடக் கண்புருவம் வில்லம்பாம் காண் . பொருள் வில்லம்பு 1 ) அம்பு பூட்டிய வில் வளைந்திருக்கும். 2) அம்பானது தன் கூர்மையால் பகைவரை வஞ்சிக்க எந்நேரமும் ஆயத்தமாக இருக்கும் . 3) போரில் களைப்புற்றோர் கூட வெற்றி பெற உதவிகரமாக இருக்கும். 4) கலைநயமிக்க வில்லம்பு பார்க்க இனிமை    தரும். 5) உலகில் தேவர்களாக இருந்தாலும்…

சுந்தரச் சிலேடைகள் 11 : கண்ணும் கத்தியும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 11 கண்ணும் கத்தியும் ஒளிர்ந்திடும், காப்படையும் , நீர்காணும், ஒப்பில் பளிங்கொக்கும் ,போர்செய்யும் , பாயும்- தெளிந்தோரே நல்லுலகம் கண்ட  நடைமாதர் கண்களுக்கு வல்லோரின் கூர்வாளே ஒப்பு . கண் பெண்களின் கண்கள் ஒளி வீசும் இமை என்னும் உறைக்குள் பாதுகாப்பாய் இருக்கும் . சோகத்திலோ , மகிழ்ச்சியான நேரத்திலோ கண்களிலிருந்து நீர் வரும் . பளிங்கை ஒத்து வெண்ணிறம் கொண்டிருக்கும் . கண்கள் காதலனுடன் அடிக்கடி போர் புரியும் . ஆடவர் ஆழ்மனம் வரை ஊடுருவிப் பாய்ந்து…

சுந்தரச் சிலேடைகள் 10 : கறிவேப்பிலையும் சிப்பியும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 10 கறிவேப்பிலையும் சிப்பியும் பயனது உள்வைத்துப், பக்குவம் சேர்த்து, வியக்கப் பயனளித்து, வீழ்ந்து.-துயரடைந்து நற்பயன் தந்தளித்து நாணிக் கிடப்பதிலே பொற்சிப்பி வேப்பிலைக் கீடு. பொருள்: 1) பயன்களாகக், கறிவேப்பிலை மருத்துவத்தையும், சிப்பி முத்தையும் தன்னுள்ளே வைத்திருக்கின்றன. 2)இவ்விரண்டும் அடைந்தவரைப் பக்குவமாய்ப் பாதுகாக்கின்றன. 3) பிறர் வியக்குமளவிற்கு இவ்விரண்டும் பயனளிக்கின்றன. 4) பாரோர் இவற்றின் பயன்பெற்ற பின்னர் கீழே தூக்கி எறிந்து விடுகின்றனர். 5) அதனால் போவோர் வருவோர் காலில் மிதிபட்டுத் துன்புறுகின்றன. 6) நற்பயன் தந்தாலும் பயனைமட்டுமே எடுத்துக்கொண்டு…

சுந்தரச் சிலேடைகள் 9: சிவனும் தென்னையும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 9  சிவனும்  தென்னையும்   நீண்டிருக்கும், நீர்தரும் நீள்முடி கொண்டிருக்கும், ஆண்டிக்கும்  வாழ்வளிக்கும் ,அன்பிருக்கும்,-தோண்டிடத்தான் வேரிருக்கும் ,தொல்லை வெளியேறும்  நற்றென்னை பாரில்  சிவனுக்கு ஈடு. பொருள் :- சிவன் – தென்னை. 1)இறைவன் புகழ்  நீண்டது. அதற்கு எல்லை கிடையாது. தென்னையும் நீண்டு வளர்ந்திருக்கும். 2) சிவனை வணங்கத் திரு நீர் எனச் சிறப்பிக்கத்தகும் கங்கை நீர் கிடைக்கும். தென்னை இளநீர் தரும். 3 ) சிவன் நீண்ட சடைமுடி கொண்டிருப்பான். தென்னையும்  நீண்ட தோகைகளை முடியாகக் கொண்டிருக்கும்….

சுந்தரச் சிலேடைகள் 7 – ஆசானும் நன்னீரும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 7 ஆசானும் நன்னீரும் தாகத்தைத் தீர்க்கும், தடுமாற்றம் போக்கிடும், பாகத்தான் மேலே பரந்தோடும்.-பாகாக்கும் தெள்ளிய தூய்மைக்கும்,தேயமுய்யும் ஓங்கலுக்கும் , பள்ளியனும் நன்னீரும் ஒன்று. பொருள்: ஆசிரியர்: 1)மாணவர்களின் கல்வித் தாகத்தைத் தீர்ப்பார். 2)மாணவர்தம் அறியாமையால் ஏற்படும் தடுமாற்றம்  தீர்க்கப்படுகிறது. 3)ஈசனும் ஆசானே.அவன் உடல் உள்ளத்தின் மேல் கல்வி பரந்தோடுகிறது. 4)ஆசிரியர்  ஒவ்வொருவரையும் பாகாக்கும் வல்லமை உடையவர் இனிமையான பேச்சைக் கொண்டவராக்கும் திறமை பெற்றவர்.அருந்தமிழ்ப் பாக்களைக் காக்கும் பண்புள்ளவராகவும் உள்ளார். 5) ஆசிரியர் தீயன களைந்து மாணவர்களைத் தூய்மையாக்குகிறார் 6)உலகம்…

சுந்தரச் சிலேடைகள் 6 : பைந்தமிழும் தாய்மையும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 6 பைந்தமிழும் தாய்மையும் சொல்ல இனிமைதரும் சோதிக்கக் கன்னலதாம் வல்ல ஒலியெழுப்ப வாய்திறக்கும்-பொல்லாங் கொழிக்கும், பொதுமையாய் ஓங்கித் திளைக்கும் எழிற்றமிழைத் தாய்மையெனச் சாற்று. பொருள் : 1)தாயைப் பற்றியும் தமிழ்மொழியைப் பற்றியும் சொல்லும்போதே இனிமையாக இருக்கும் . 2)தாயின் தாலாட்டுப் பொருள் வலிமையானதாக இருக்கும், அதுபோலத் தமிழ்ச் சொற்களும் ஆக்கமுடையதாக இருக்கும். 3)வருந்துயரமெல்லாம் தாய் தாங்கிப் பிள்ளைகளை மகிழ்வுடன் வளர்ப்பதுபோல், தமிழ்மொழியும் தன்னைப் பிழையறக் கற்றவருக்குப் பெருமையைத் தருகிறாள். தடுமாற்றத் துயரைப் போக்குகிறாள். 4) எத்தனை குழந்தைகள் பெற்றாலும்…

சுந்தரச் சிலேடைகள் 5 : கோயில்மாடும் இளைஞனும்

    சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 5 ஊர்சுற்றும், ஓரிடத்தில் உன்னதமாய் நில்லாதாம், தார்வேந்தன் போலத் தலைதூக்கும்-மார்தட்டும் சண்டையிடச் சக்திகொண்டு சாதிக்கும், கோமாடும் விண்ணேர் இளைஞனும் ஒன்று. பொருள் கோயில்மாடு & இளைஞன். 1) ஊர்சுற்றித் திரியும். 2) ஒரிடத்தில் நிற்காமல் அங்குமிங்குமாக அலையும். 3) மன்னன் தலைதூக்கிப் பார்ப்பதுபோல் பார்க்கும் 4) எதிரி யாரெனினும் மார்தட்டிச் சண்டையிடும். 5) வெற்றி பெறும்வரையில்  போராடும் எனவே, கோயில் மாடும் இளைஞனும் ஒன்றாம்  

சுந்தரச் சிலேடைகள் 4. கோழியும் குழந்தையும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 4 கோழியும் குழந்தையும் உருளும், புரண்டோடும், உள்ளம் களிக்கத் தெருவோடிக் கூவிநிற்கும்  தேவைக்(கு)-இருளில் இரைதேடும், எல்லா இடமும் கழிக்கும் விரைகுழவி கோழியு  மொன்று . பொருள்-கோழி, குழந்தை கோழிபோலவே குழந்தையும் மண்ணில் உருண்டும் , புரண்டும் உடம்பை அழுக்காக்கும். தெருவினில் நின்று கூவும்.அதேபோலக் குழந்தையும் சிரிக்கும் உணவு  உண்ணக் காலநேரம் பார்க்காது.கண்ட இடங்களில் மலசலம் கழிக்கும். இவ்வாறாகக் கோழியும் , குழந்தையும் நடைமுறையில் ஒத்துப்போகின்றனர்.  

சுந்தரச் சிலேடைகள் 3. இதயமும் கடிகாரமும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சுந்தரச் சிலேடைகள் இதயமும் கடிகாரமும் துடித்திடும், உள்ளிருக்கும், தூங்காமல் ஓடும், வடிக்க அழகூட்டும், வாழ்வில்-படியாத மாந்தருக்கும் பாங்காகும் மாகடி காரமும் , சாந்த இதயமும் சான்று. பொருள்: இதயம் 1)இதயம் துடிக்கும் 2) உயிர்களின் உடலுக்கு உள்ளே பாதுகாப்பாக அமைந்திருக்கும். 3) நாம் தூங்கினாலும் அதுதூங்காமல் இயங்கிக் கொண்டிருக்கும். 4) வரைந்து பார்த்தால் அழகாக இருக்கும். 5) படித்தவர், படியாதவர் என்ற பேதமின்றி அனைவருக்கும் அமைந்திருக்கும். கடிகாரம் 1) துடிக்கும் 2) கண்ணாடிக்குள் இருக்கும். 3) தூங்காமல் ஓடும் 4) வரைந்து…