உ.வே.சா. வின் என் சரித்திரம் 51: மகா வைத்தியநாதையர்

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 50: கலைமகள் திருக்கோயில் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-50மகா வைத்தியநாதையர் ஒவ்வொரு நாளும் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்கும் நேரம் போகமற்ற நேரங்களிற் பழைய பாடங்களைச் சிந்தித்து வருவது மாணாக்கர்கள்வழக்கம். சில சமயம் நான் ஆசிரியர் சொல்லும் புதிய பாடல்களையும்கடிதங்களையும் எழுதுவேன். தேசிகர் பாடம் சொல்லுதல் அவகாசம் ஏற்படும்பொழுது சுப்பிரமணிய தேசிகர் தாமே சிலருக்குப்பாடம் சொல்லுவார். திருக்குறள் பரிமேலழகருரையில் அவருக்கு மிக்கவிருப்பம் உண்டு. அதனையும், திருக்கோவையார் இலக்கண விளக்கம் என்னும்நூல்களையும் யாருக்கேனும் பாடம் சொல்லுவார். தேசிகர் இலக்கணச்செய்திகளை வரையறையாகச் சொல்வதும்,…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 50 : கலைமகள் திருக்கோயில்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அபய வார்த்தை – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 49 கலைமகள் திருக்கோயில் மாயூரத்தில் வசந்தோற்சவம் ஆன பிறகு சுப்பிரமணிய தேசிகர்திருவாவடுதுறைக்குப் பரிவாரங்களுடன் திரும்பி வந்தனர். அவருடன்பிள்ளையவர்களும் நாங்களும் திருவாவடுதுறை வந்து சேர்ந்தோம். வழக்கப்படிமடத்திலே பாடங்கள் நடைபெற்று வந்தன. தேசிகரின் பொழுது போக்கு சுப்பிரமணிய தேசிகர் காலை எழுந்தது முதல் இரவில் துயிலச் செல்லும்வரையிற் பாடம் சொல்வது, வித்துவான்களோடு சம்பாசணை செய்வது,மடத்திற்கு வருபவர்களுடைய குறைகளை விசாரித்து வேண்டிய உதவிகளைச்செய்வது ஆகிய விசயங்களிலே பெரும்பாலும் பொழுதைப் போக்கி வந்தார்….

உ.வே.சா.வின் என் சரித்திரம் 78 – அன்பு மூர்த்திகள் மூவர்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 77 : அத்தியாயம்-46.2 – தொடர்ச்சி என் சரித்திரம் அத்தியாயம்-47 அன்பு மூர்த்திகள் மூவர் திருவாவடுதுறை மடத்தில் இருவகைப் பாடங்களும் காலையிலும்மாலையிலும் முறையாக நடந்து வந்தன சுப்பிரமணிய தேசிகருடைய அன்புஎன்மேல் வர வர அதிகமாகப் பதியத்தொடங்கியது பிள்ளையவர்களுக்குஎன்பாலுள்ள அன்பின் மிகுதியை அறிந்த தேசிகர் என்னிடம் அதிக ஆதரவுகாட்டினர். அவ்விருவருடைய அன்பினாலும் மற்றவர்களுடைய பிரியத்தையும்நான் சம்பாதித்தேன். மடத்திலே பழகுபவர்கள் என்னையும் மடத்தைச் சார்ந்தஒருவனாகவே மதிக்கலாயினர். மடத்து உத்தியோகத்தர்கள் என்னிடம்பிரியமாகப் பேசி வந்தவுடன் எனக்கு ஏதேனும் தேவை இருந்தால் உடனேகொடுத்து உதவித் தங்கள்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 77 : அத்தியாயம்-46 – தொடர்ச்சி

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 76 : இரட்டிப்பு இலாபம் – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-46 – தொடர்ச்சி “என்ன பாடம் ஆரம்பிக்கலாம்?” என்ற யோசனை எழுந்த போது சுப்பிரமணிய தேசிகர், “எல்லோருக்கும் ஒரே பாடத்தைச் சொல்லுவதைக் காட்டிலும் குமாரசாமித் தம்பிரான் முன்னமே சில நூல்களைப் பாடங் கேட்டிருத்தலால் அவருக்கு ஒரு பாடமும் மற்றவர்களுக்கு ஒரு பாடமும் நடத்தலாம். குமாரசாமித் தம்பிரானுக்குத் திருவானைக்காப் புராணத்தை ஆரம்பிக்கலாம்; மற்றவர்கள் சீகாளத்திப் புராணம் கேட்கட்டும்” என்று சொல்லி மேலும் பாட சம்பந்தமான சில விசயங்களைப் பேசினார். எனது…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 64 : யான் பெற்ற நல்லுரை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 63 : நான் கொடுத்த வரம் 2 -தொடர்ச்சி) யான் பெற்ற நல்லுரை 39 மறுநாள் காலையில் நாங்கள் திருவிடைமருதூரைவிட்டுப் புறப்பட்டோம். பட்டீச்சுரத்திற்குக் கும்பகோணத்தின் வழியாகவே போகவேண்டும். கும்பகோணத்தில் வித்துவான் தியாகராச செட்டியாரைப் பார்த்துவிட்டுச் செல்லவேண்டுமென்பது பிள்ளையவர்களின் கருத்து. தியாகராச செட்டியார் தியாகராச செட்டியாருடைய பெருமையை நான் பல நாட்களுக்கு முன்பிருந்தே கேள்வியுற்றவன். கும்பகோணம் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்த அவர் சிறந்த படிப்பாளி என்றும் அவரிடம் படித்த மாணாக்கர்கள் எல்லாரும் சிறந்த தமிழறிவுடையவர்கள் என்றும் சொல்லிக்கொள்வார்கள். கல்லூரியில் உள்ள…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 62 : நான் கொடுத்த வரம் 1

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 61 : எனக்குக் கிடைத்த பரிசு -தொடர்ச்சி) 38. நான் கொடுத்த வரம் திருவாவடுதுறையிலிருந்து புறப்பட்ட நாங்கள் திருவிடைமருதூருக்கு மாலை ஆறு மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கே ஆறுமுகத்தா பிள்ளையின் மைத்துனராகிய சுப்பையா பண்டாரமென்பவருடைய வீட்டில் தங்கினோம். இரவில் அங்கே தங்கிவிட்டு மறுநாட் காலையில் பட்டீச்சுரத்துக்குப் புறப்படலாமென்று என் ஆசிரியர் எண்ணினார். சிவக்கொழுந்து தேசிகர் பெருமை பிள்ளையவர்கள் தளர்ந்த தேகமுடையவர். ஆதலின் சாகை சேர்ந்தவுடன் படுத்தபடியே சில நூற் செய்யுட்களை எனக்குச் சொல்லி எழுதிக்கொள்ளச் செய்து பொருளும் விளக்கினார். திருவிடைமருதூர்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 61 : எனக்குக் கிடைத்த பரிசு

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 60 : எல்லாம் புதுமை – தொடர்ச்சி) என் சரித்திரம் 37. எனக்குக் கிடைத்த பரிசு பல வித்துவான்கள் நிறைந்த கூட்டத்தில் இருந்து பழகாத எனக்குத் திருவாவடுதுறைச் சத்திரத்தில் வித்துவான்கள் கூடிப் பேசி வந்த வார்த்தைகளும் இடையிடையே பல நூல்களிலிருந்து சுலோகங்களைச் சொல்லிச் செய்த வியாக்கியானமும் ஆனந்தத்தை விளைவித்தன. சங்கீத வித்துவான்கள் என்னைப் பாராட்டியபொழுது, “சங்கீத அப்பியாசத்தை நாம் விட்டது பிழை” என்று கூட எண்ணினேன். ஆனால் அந்த எண்ணம் நெடுநேரம் நிற்கவில்லை. இவ்வாறு பேசிக்கொண்டும் வித்துவான்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டுமிருந்தபோது…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 60 : எல்லாம் புதுமை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 59 : 35. சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில் – தொடர்ச்சி) என் சரித்திரம் 36. எல்லாம் புதுமை நான் சுப்பிரமணிய தேசிகரது தோற்றத்திலும் பேச்சிலும் ஈடுபட்டு இன்பமயமான எண்ணங்களில் ஒன்றியிருந்தபோது தேசிகர் என்னை நோக்கி அன்புடன், “இப்படி முன்னே வாரும்” என்று அழைத்தார். நான் அச்சத்துடன் சிறிது முன்னே நகர்ந்தேன். “சந்நிதானம் உம்மைப் பரீடசை செய்யவும் கூடும்” என்று ஆசிரியர் மாயூரத்திலிருந்து புறப்படும்போது சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. “சிறந்த அறிவாளியும் உபகாரியும் எல்லா வகையிலும் பெருமதிப்புடையவருமாகிய சுப்பிரமணிய தேசிகர் நம்மைப்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 59 : 35. சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 58 : புலமையும் வறுமையும்- தொடர்ச்சி) என் சரித்திரம் திருநெல்வேலி சில்லாவில் உள்ளவர்களுக்குத் தாமிரபரணி நதியும் திருக்குற்றால தலமும் பெரிய செல்வங்கள்; அவற்றைப் போலவே மேலகரம் திரிகூடராசப்பக்கவிராயர் இயற்றிய நூல்கள் இலக்கியச் செல்வமாக விளங்குகின்றன. மேலகரமென்பது தென்காசியிலிருந்து திருக்குற்றாலத்திற்குப் போகும் வழியில் உள்ளது. முன்பு திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து வெளியிடங்களுக்கு வரும் கனவான்களிற் பெரும்பாலோர் திருக்குற்றாலக் குறவஞ்சியிலிருந்து சில பாடல்களைச் சொல்லி ஆனந்தமடைவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்கள்; பலர் திருக்குற்றாலத் தல புராணத்திலிருந்தும் அரிய செய்யுட்களைச் சொல்லி மகிழ்வார்கள். தென்பாண்டி நாட்டார் பெருமதிப்பு வைத்துப்…