சில அறிஞர் சங்க நூல்களிற் சில ஆரியத் தெய்வங்கள் கூறப்பட்டுள்ளமையை அடிப்படையாகக் கொண்டு, சங்க காலப் பகுதியில் தமிழ் நாட்டில் ஆரியர் சமய வாழ்க்கைப் பண்பே சிறப்புற்றிருந்தது என்று கொண்டனர். இக்கூற்று ஏற்கத்தக்கதொன்றன்று. சங்கநூல்களில் விட்டுணு இந்திரன் முதலிய ஆரியத் தெய்வங்கள் இடையிடையே கூறப்பட்டுள்ளமை உண்மையே. ஆனால் நில இயற்கைக்கு ஏற்ப அமைந்த முருகன், கொற்றவை போன்ற திராவிடத் தெய்வங்களே மிகவும் சிறப்புடன் வணங்கப்பட்டு வந்தனர் என்பதையும் அதே நூல்களிலிருந்து அறியலாம். தமிழருக்கே தனியாக அமைந்த வழிபாட்டு முறைகளையும் அந் நூல்களிற் காண்கின்றோம்….