கலைச்சொல் தெளிவோம்! 2.] பொரித்தலும் வறுத்தலும் – இலக்குவனார் திருவள்ளுவன்
(குஞ்சு)பொரித்தல்-hatch/hatching(வேளா., பயி., மனை., கால்.); fry/frying (கால்., மனை., வேளா., வங்., மீனி., தக.); puff(மனை.); வறுத்தல்-fry/frying(மனை.,கால்.); roasting (புவி., மனை., கால்., தக., வேதி., வேளா.) என்று அடைகாத்துக் குஞ்சுபொரித்தல், வாணலியிலிட்டு வறுத்தல், தீயிலிட்டு வாட்டுதல், என ஒரே சொல்லையே வெவ்வேறுவகைக்குக் குறிப்பிடுகின்றனர். சங்கக்காலத்தில் கருனை(4) எனப் பொரித்தகறியைக் (Any preparation which is fried) குறிப்பிட்டுள்ளனர். கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு (நற்றிணை367.3) [கரிய கண்ணையுடைய கிழங்கின் பொரிக்கறியோடு கூடிய செந்நெல் அரிசியாலாக்கிய வெளிய சோற்றுத்திரளை] பசுங்கண்கருனைச்சூட்டொடுமாந்தி…