(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.13. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 1.14. சூது விலக்கல் சூதுவஞ் சனையதற் கேதுவாங் கருவி. சூதாட்டம் ஏமாற்றுவதற்கு ஏற்ற ஒரு கருவி ஆகும். பந்தயங் குறிக்கும் பலவிளை யாடல். சூதாட்டம் என்பது பந்தயம் வைத்து விளையாடும் பலவகை விளையாட்டுகள் ஆகும். அதுபொரு டருதல்போ லனைத்தையும் போக்கும். சூதாட்டத்தில் ஈடுபடும்போது முதலில் பொருள் வருவது போலத் தோன்றினாலும் அது பின்னர் எல்லாவற்றையும் இழக்கச் செய்யும். உற்றவூ ணுடைமுதல் விற்றிடச் செய்யும். சூதாட்டம், ஒருவன் தனது உணவு, உடை முதலியவற்றைக் கூட விற்கும்படியான…