செந்தமிழர் போற்றும் செம்மொழி க.இராமசாமி! – இலக்குவனார் திருவள்ளுவன்
செந்தமிழர் போற்றும் செம்மொழி க.இராமசாமி! 18ஆம் நூற்றாண்டில் ‘பொன்பரப்பியனான வனகோபரன்’என்னும் சோழர்கள் பரம்பரையிலிருந்து வந்து ஆட்சி செய்து வந்த சிற்றரசன் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட ஊரே ‘பொன்பரப்பி’. அரியலூர் மாவட்டத்திலுள்ள பொன்பரப்பி ஊர் தமிழர் உரிமை வரலாற்றில் இடம்பெற்றுள்ளதுபோல் செம்மொழி வினைவலர் இராமசாமி பிறந்தமையால் செம்மொழிச் செயலாக்க வரலாற்றிலும் இடம் பெற்றுவிட்டது. ‘செம்மொழியார்’, ‘செம்மொழிச் செம்மல், எனச் செந்தமிழரால் போற்றப்படும் அறிஞர் செம்மொழி இராமசாமி பொன்பரப்பியில் ஆவணி 26, தி.பி.1980/10.09.1949 அன்று பிறந்தார். படிப்பும் கல்விப் பணியும் ஆய்வுப்பணியும் தான்பிறந்த ஊரான…