செந்தமிழ்க்கோயில் அமைக்க உதவி வேண்டல்!
அன்புடையீர் வணக்கம்!!! தமிழ்நாட்டில் தமிழ் தழைத்தோங்கி இருந்த நிலை மாறி இன்று தமிழ் தலை தொங்கி இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கண்ணுதற் பெருங்கடவுளும், மூவிரு முகங்கள் கொண்ட கந்தவேளும் தலைமை தாங்கி வளர்த்த தமிழுக்கு இந்த நிலை… அதிலும் அந்த பரம்பொருளை வழிபடும் கோயில்களில் தமிழுக்கு இடமில்லை… என்ன அவலம்!!!! கேட்டால் நீங்கள் வேண்டுமானால் தமிழ் வழிபாட்டிற்கென்று தனியே ஒரு கோயில் கட்டிக்கொள்ளுங்கள் என்கிறது தமிழ் எதிர்பாளர்களின் குரல்… அப்படிச் செய்தால்தான் என்ன? தமிழன் எழுச்சி கொண்டு இதனை செய்து முடித்தால் தமிழ் வழிபாட்டிற்கு எதிர்க்குரல்தான் இனியும் எழுந்திடுமோ??…