கவிஞர் மு.முருகேசுக்குச் ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது   வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த இதழாளர் கவிஞர் மு.முருகேசுக்குப் புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது.     மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015 இல் புதுச்சேரியில் நடைபெற்ற இவ்விழாவிற்குப் புதுச்சேரி கம்பன் கழகச் செயலாளர் வே.பொ.சிவக்கொழுந்து தலைமையேற்றார். குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத தலைவர் கலைமாமணி அ.உசேன் அனைவரையும் வரவேற்றார்.     புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவைத் தலைவர் வ.சபாபதி…