செம்மறி ஆடாய்ச் செத்தது போதும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
செம்மறி ஆடாய்ச் செத்தது போதும்! செம்மொழி பேசும் பெருமை பெற்ற, நம்மினம் அறிவில் வறுமை உற்று, ஐம்புலன் கருகி ஆற்றல் இழந்து, பொம்மையைப் போலப் பேசாமல் இருந்து, செம்மறி ஆடாய்ச் செத்தது போதும்! இம்முறை யாவது சிந்தனை செய்து, சிம்மம் போலச் சீறி எழுந்து, செம்மை மிகுந்த தலைவன் கையில், நம்தமிழ் நாட்டின் ஆட்சியைக் கொடுப்போம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
காட்டைப் பார்த்து வெகு நாளாயிற்று … குமுறும் ஆடுகள் 1 – வைகை அனீசு
வனப்பகுதியில் ஆடுகள் மேய்க்கத் தடை பொதுவாக மக்களை மூவகையாகப் பிரிப்பர். முதலியர், இடையர், கடையர் என்ற பிரிவினர். கால்நடைகளை மேய்த்தவர்களை இடையர் – வேட்டுவ வாழ்வுக்கும் உழவு வாழ்வுக்கும் இடைப்பட்டவர் என்பர். ஆயர், மேய்ப்பர் என்ற சொற்கள் கிறித்தவச் சமயத்துடன் தொடர்புடைய சொற்களாக மாறிவிட்டன. ஆயம் என்பது மந்தை என்ற பொருள் கொண்டது. ஆடுகளை மேய்ப்பவர் ஆயர் எனவும் அழைக்கப்படுவர். இதேபோன்று தொழு, தொறு, தொழுவம், தொழுவர், தொழுதி எனவும் உள்ளன. பட்டினப்பாலையில் 281ஆம் அடியில் வரும் ‘புன்பொதுவர்’ என்னும் தொடருக்குப் ‘புல்லிய…