தமிழ்ப்பெயர் சூட்டாதாரை இரும்புக் கரம் கொண்டு அடக்கிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்ப்பெயர் சூட்டாதாரை இரும்புக் கரம் கொண்டு அடக்கிடுக! உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் (திருவள்ளுவர், திருக் குறள் 813) பயன்கருதிப் பழகுநருக்கும் பரத்தையருக்கும் கள்வருக்கும் ஒப்பாகத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாமல் பிற மொழிச்சொற்களைப் பயன்படுத்துவோரைக் கூறலாம். ஏனெனில் அவர்கள் தமிழ்ச்சொற்களை மக்கள் பயன்படுத்த இயலா வண்ணம் கவர்ந்து அகற்றி விடுகிறார்கள். பொதுநலம் பார்க்காமல் பிறருக்குப் பொதுவாக இருந்து புன்னலம் தோயும் விலைமக்களுக்கு ஒப்பாகத் தமிழ் நலம் பார்க்காமல் வாழ்கிறார்கள். குமரி முதல் இமயமலை வரை வழங்கி வந்த தமிழ் மொழி,…
எமனுக்குத் தமிழ் கற்பிக்கச் சென்றார் தமிழறிஞர் மா. நன்னன்!
எமனுக்குத் தமிழ் கற்பிக்கச் சென்றார் தமிழறிஞர் மா. நன்னன்! திராவிட இயக்கத்தில் பற்றுக்கொண்ட தமிழறிவை எளியவருக்கும் புகட்டிய தமிழறிஞர் முனைவர் மா.நன்னன் அகவை முதிர்வால் தம் 94 ஆம் அகவையில் இயற்கை எய்தினார். [சில நினைவுகள்: அறிஞர் நன்னன் ஐயா அவர்களுடனான நினைவுகளில் சிலவற்றைப் பகிர விரும்புகின்றேன். அவர் தமிழ்வளர்ச்சி இயக்குநராக இருந்தபொழுது தமிழ்வளர்ச்சி இயக்ககத்தின் செயல்பாடின்மைபற்றி கருத்து தெரிவித்தேன். அதற்கு அவர், “நான் பெரியார்வழி வந்தவன். உங்கள் கருத்தைத் தமிழ் ஆர்வத்தில் எழுந்ததாக உணர்கிறேன். ஆனால், பிறர் அவ்வாறு எண்ணாமல்…