மறைமலை இலக்குவனார் நூல்கள் அறிமுக விழா – படங்கள்
செம்மொழிச்சுடர், In Defense of Classical Tamil என்னும் முனைவர் மறைமலை இலக்குவனார் நூல்கள் அறிமுக விழா சென்னை கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் ‘செவ்வாய்தோறும் செந்தமிழ்’ என்னும் ்தலைப்பில் இவ்வாண்டிற்கான முதல் இலக்கியக் கூட்டம் மார்கழி 18,2048 செவ்வாய் சனவரி 02,2018 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரின் செம்மொழிச்சுடர், In Defense of Classical Tamil ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா நடைபெற்றது. சிவலாயம் செ.மோகன் தலைமையில் நீதிபதி இரா.சுரேசுகுமார், தேர்ந்த இலக்கியவாதி போல் சிறப்பாக அறிமுக உரை யாற்றினார்….
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’-ஆய்வுநூல் 8 – மறைமலை இலக்குவனார்
(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி) ‘தமிழ்மொழி, முண்டா, திராவிடம், ஆரியம் எனும் மூன்றினாலும் உருவாயது’ என்று வையாபுரி(ப்பிள்ளை) கூறுகிறார் (History of Tamil language and literature, p. 5). தமிழ்மொழியைத் திராவிடத்திற்கு அயலான ஒன்றாக வையாபுரியார் கருதுவது வியப்பையளிக்கிறது என்கிறார் பேராசிரியர் இலக்குவனார். ‘தமிழையும் தமிழைச் சார்ந்த மொழிகளையும் திராவிடம் என்று அழைத்தலை அவர் மறந்துவிட்டார் போலும்’ (மே.ப. ப.177) என வியக்கும் பேராசிரியர், ‘ஒரயான் (Oraon) என்ற மொழி திராவிடக் குழுமொழிகளுள் திருத்தம்…
இலக்குவனாரின் “பழந்தமிழ்”-ஆய்வுநூல்: 7 – மறைமலை இலக்குவனார்
(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) 7 எனினும் இத்தகைய உண்மைகளை உணரப்பெறா வையாபுரியார் தொல்காப்பியரை மேலும் கடன்பட்டவராகவே காட்ட விழைகிறார். தொல்காப்பியத்தில் ‘மொழிமரபு’ இயலில் அமைந்துள்ள இரண்டு நூற்பாக்கள் வரருசி இயற்றிய ‘பிராகிருதப் பிரகாசா’ எனும் இலக்கணநூலில் காணப்படும் இரு நூற்பாக்களின் மொழியாக்கமே என வாதிடுகிறார், வையாபுரியார். ‘அகர இகரம் ஐகாரமாகும்’ ‘அகர உகரம் ஔகாரமாகும்’ என்பவை அவ்விரு நூற்பாக்களுமாகும். ‘இவற்றுள் காணப்படும் புதுமை என்ன? பிராகிருத நூல்களிலிருந்து கடன்பெற்றுச் சொல்லவேண்டிய இன்றியமையாமை யாது உளது? மொழிவரலாற்றில் ஐயும்…
இலக்குவனாரின் “பழந்தமிழ்”-ஆய்வுநூல்: 6 – மறைமலை இலக்குவனார்
“திராவிடமொழியின் தொன்மையை நிலைநாட்டப் பேரளவில் பெறலாகும் துணையினைச் செந்தமிழே அளிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்” என்னும் அறிஞர் கால்டுவெல் (திரா. ஒப். – ப. 106) கூற்றினையும் தம் கருத்துக்கு அரண்சேர்க்கும் வகையில் மேற்கோள் காட்டுகிறார். திராவிடமொழிகள் பன்னிரண்டையும் ஒப்பிட்டு ஆராய்ந்து இவையனைத்தும் ஒரு குழுவைச்சார்ந்தனவே எனத் திட்டவட்டமாக ஆய்ந்து நிறுவிய அறிஞர் கால்டுவெல் “பழந்தமிழ்தான் இவையனைத்துக்கும் தாயாகும் உரிமையும் சிறப்பும் உடையது என்பதை வெளிப்படையாகக் கூறினாரிலர்” (பழந்தமிழ் – ப. 67) என வருந்தும் பேராசிரியர், “அவர் அவ்வாறு கூறாது போயினும், அவருடைய ஆராய்ச்சி…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 4 – மறைமலை இலக்குவனார்
(ஆடி 17, 2046 / ஆக 02, 2015 தொடர்ச்சி) எனினும் இத்தகைய உண்மைகளை உணரப்பெறா வையாபுரியார் தொல்காப்பியரை மேலும் கடன்பட்டவராகவே காட்ட விழைகிறார். தொல்காப்பியத்தில் ‘மொழிமரபு’ இயலில் அமைந்துள்ள இரண்டு நூற்பாக்கள் வரருசி இயற்றிய ‘பிராகிருதப் பிரகாசா’ எனும் இலக்கணநூலில் காணப்படும் இரு நூற்பாக்களின் மொழியாக்கமே என வாதிடுகிறார், வையாபுரியார். ‘அகர இகரம் ஐகாரமாகும்’, ‘அகர உகரம் ஔகாரமாகும்’ என்பவை அவ்விரு நூற்பாக்களுமாகும். ‘இவற்றுள் காணப்படும் புதுமை என்ன? பிராகிருத நூல்களிலிருந்து கடன்பெற்றுச் சொல்லவேண்டிய இன்றியமையாமை யாது உளது?…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 1 – மறைமலை இலக்குவனார்
செந்தமிழின் செம்மொழிச்சீர்மையை விளக்கும் இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் செம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோற்றம் ஏனைய மொழிகளின் சார்பின்றியிருத்தலும் வேண்டும். என்கிறார் அமெரிக்கத் தமிழறிஞர் சார்சு கார்ட்டு (George Hart). ஒரு மொழியின் இலக்கியப்பழமையே அதனைச் செம்மொழியாகப் போற்றுதற்கு முதன்மைக் காரணம் எனக் கூறுவதுடன் சங்க இலக்கியங்களின் செழுமையையும் அவர் விரிவாக விளக்கித் தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேறு வழங்குவது குறித்த ஆய்வு தேவையற்றது என்கிறார். தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேறு வழங்கவேண்டும் என்று…
சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 3: மறைமலை இலக்குவனார்
(ஆனி 20, 2046 / சூலை 05, 2015 தொடர்ச்சி) பாடல் பெற்ற பல்வேறு ஒலிகள் அருவி ஒலி இயற்கையொலிகளில் அருவி ஒலியை மிகப் பெரிதும் சங்கச் சான்றோர் போற்றியுள்ளமைக்குச் சங்கப்பாடல்கள் சான்று பகர்கின்றன. ‘பெருவரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப’18 எனவும்‘அருவி விடரகத்து இயம்பும் நாட’19 எனவும் அதன் ஆரவாரத்தையும்“ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்”20 எனவும் ‘ஒல்லென விழிதரு மருவி’21எனவும் அதன் ஒலிச்சிறப்பையும் பதிவுசெய்துள்ளனர். ‘இன் இசை இயத்தின் கறங்கும் கல்மிசை அருவி’22என்று அருவியின் ஓசையை ஓர் இசைக்கருவியோசையாகவே அவர்தம் செவிகள் நுகர்ந்துள்ளன.’வயங்குவெள் அருவி…