வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து – செயராமர்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து .. வள்ளுவன் தன்னையுலகினுக்கே தந்துவான்புகழ் கொண்டநாடென தெள்ளுதமிழ் கொண்டு செப்பிநின்றான் பாரதியும் அள்ளவள்ளக் குறையாத அமுதமாம் சுரங்கமென வள்ளுவரின் குறளெமக்கு வாய்த்தெல்லோ விருக்கிறது ! பாவளவில் குறுகிடினும் பாரெல்லாம் பயனுறவே நீழ்கருத்தைச் சொல்லியதால் நிமிர்ந்துகுறள் நிற்கிறது யார்மனதும் நோகாமல் நல்லதெலாம் சொல்லுவதால் பார்முழுக்க உள்ளாரும் பார்க்கின்றார் வள்ளுவத்தை ! சமயமெலாம் கடந்துநிற்கும் சன்மார்க்க நூலெனவே இமயமென இருக்கிறது எங்களது திருக்குறளும் சமயமெலாம் கடந்தாலும் தங்களது நூலெனவே மனமாரக் கொண்டாடி மதித்திடுவார் திருக்குறளை ! அறம்பற்றிச் சொன்னாலும் அழகாகச் சொல்கிறது…
தாய்போல யாருமுண்டோ? – செயராமர், மெல்பேண்
தலைவருடி எனையணைத்து தனதுதிரம் தனைப்பாலாய் மனமுருகித் தந்தவளே மாநிலத்தில் தாய்தானே மடிமீது எனைவைத்து மாரியென முத்தமிட்டு விழிமூடித் தூங்காமல் விழித்தவளும் தாய்தானே படிமீது கிடந்தழுது பலமுறையும் வேண்டிநின்று பாருலகில் எனைப்பெற்ற பண்புடையோள் தாய்தானே விரதமெலாம் பூண்டொழுகி விதியினையே விரட்டிவிட்டு வித்தகனாய் இவ்வுலகில் விதைத்தவளும் தாய்தானே மலடியென மற்றவர்கள் மனமுடையப் பேசிடினும் மால்மருகன் தனைவேண்டி மாற்றியதும் தாய்தானே நிலவுலகில் பலபிறவி வந்துற்ற போதினிலும் நிம்மதியைத் தருவதற்கு நிற்பவளே தாய்தானே தாய்மைக்கு இலக்கணமே தாய்மைதான் ஆகிவிடும் தாய்போல இவ்வுலகில் தகவுடையார் யாருமுண்டோ வேருக்கு நீராகத் தாயிருப்பாள் எப்போதும்…