சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 05 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா
(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 04 இன் தொடர்ச்சி) 5 இர.சிறீகந்தராசா: நீங்கள் அங்கு இருந்தபொழுது உடனிருந்த கைதிகள் உடலளவிலோ உளவியலளவிலோ ஏதேனும் வதைகளுக்கு உட்பட்ட காட்சிகளைக் காண முடிந்ததா? து.வரதராசா: உளவியல் தாக்குதல் எல்லாருக்குமே இருந்தது. எனக்குக் கூட! மற்றைய மருத்துவர்களுக்கும் எல்லாம். தொடக்கத்தில் நாங்கள் சொல்வதையெல்லாம் அவர்கள் நம்ப மறுத்திருந்தார்கள். மறுத்திருந்த பொழுது அவர்களுடைய சித்திரவதை முறைகளைச் சொல்வார்கள், உண்மையைச் சொல்லாவிட்டால் இப்படியெல்லாம் நடக்கும் என்று. இர.சிறீகந்தராசா: எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறுங்கள்! து.வரதராசா: எங்களை அந்த இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போவதாகக் கூறுவார்கள்….