திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 011. செய்ந்நன்றி அறிதல்
(அதிகாரம் 10. இனியவை கூறல் தொடர்ச்சி) 01 அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 011. செய்ந்நன்றி அறிதல் பிறரது நல்உதவிகளை மறவாமல், நன்றியராய் இருத்தலை அறிதல். செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும், வானகமும், ஆற்றல் அரிது. தான்செய்யாப் போதும், பிறர்செய் உதவிக்குப், பூமி,வான் ஈ[டு]ஆகா. காலத்தி னால்செய்த நன்றி, சிறி(து)எனினும், ஞாலத்தின் மாணப் பெரிது. காலத்தே செய்த நல்உதவி,…