செல்வி தமிழ் மொழி செந்தமிழ் போல் வாழ்கவே! – புதுவைத் தமிழ்நெஞ்சன்
புதுவைக் கவிஞர் தமிழ்நெஞ்சன், தன் மகள் செல்வி தமிழ்மொழியின் பிறந்த நாளில் அவரை வாழ்த்திய பாடல்கள் இரண்டு. என்றன் பிள்ளை என்னுயிர் தமிழ்மொழி எல்லா புகழும் பெற்றிடுவாள் – நாம் முன்னம் வாழ்ந்த முத்தமிழ்க் குடியின் மூச்சாய் இருந்து காத்திடுவாள் அறிவில் அன்பில் ஆற்றலில் எல்லாம் அவளே முதலிடம் பிடித்திடுவாள் – குறள் நெறியில் நின்று நீள்வினை ஆற்றிட நெருப்பாய் நின்று வெடித்திடுவாள் வாழ்க்கை எதுவென வள்ளுவம் சொன்ன வழியில் தானே சென்றிடுவாள் – நம்மை சூழ்ந்த கேட்டைச் சுட்டெ ரிக்கும் சுடர்மதி ஆகி…