தமிழ், தமிழர் அழிவிற்குக் காரணம் இவர்களே! I இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ், தமிழர் அழிவிற்குக் காரணம் இவர்களே! – இலக்குவனார் திருவள்ளுவன் காணுரை – செவ்வி காண்பவர் விசவனூர் வே.தளபதி முற்றம் தொலைக்காட்சி
தோழர் தியாகு எழுதுகிறார் 100 : பதிவுகள் தளத்தில் செவ்வி 7
(தோழர் தியாகு எழுதுகிறார் 99: பதிவுகள் தளத்தில் செவ்வி 6 – தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 7 இதற்குப் பிற்பாடு தலைமை தொடர்பான கேள்வி வருகிறது. குமுகிய(சோசலிச)ப் புரட்சிக்குப் பாட்டாளி வருக்கம் தலைமை தாங்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு கருத்தியல் தலைமையாவது வேண்டும். ஆனால் இதற்கு அப்படிக் கிடையாது. இது ஒரு புரட்சிகரச் சனநாயகக் கட்டம் என்பதால் ஒரு பொதுவான புரட்சிகரத் தலைமை வேண்டும். எல்லாச் சக்திகளையும் இணக்கப்படுத்துவதற்குப் புரட்சிகரமான முறையில் ஒன்றுபடுத்துவதற்கு – பொது எதிரிக்கெதிராக இந்த அணிவகுப்பை…
தோழர் தியாகு எழுதுகிறார் 99 : பதிவுகள் தளத்தில் செவ்வி 6
(தோழர் தியாகு எழுதுகிறார் 98: பதிவுகள் தளத்தில் செவ்வி 5 – தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 6 யமுனா : பொதுவாக மார்க்குசியத்தின் தேசியம் தொடர்பான அணுகுமுறையை இடித்தாய்வு செய்யும்(விமர்சிக்கும்) போது மார்க்குசியம் இரண்டு விசயங்கள் தொடர்பாக வரலாற்று முறையிலான – அடம்பிடித்த படியிலான தவற்றைச் செய்திருக்கிறது என உரொனாலுடு மங்கு(Ronald Mang) தனது நூலில் குறிப்பிடுகிறார். பெண்கள் தொடர்பான சிக்கலையும் தேசியம் தொடர்பான சிக்கலையும் அணுகிய விதம் அதனது புரட்சிகரத் தன்மைக்கே அவையிரண்டும் சவாலாக உருவாக வேண்டிய சூழலை உருவாக்கி…
தமிழைச் சிதைக்கலாமா? இலக்குவனார் திருவள்ளுவன் நேர்முகம் – கவிமணி
நாள் வைகாசி 16, 2045, மே 30, 2014 பக்கம் 16 “தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்” என்னும் நிகழ்ச்சி நடந்ததைக் கேள்விப்பட்டோம். தமிழ்க்காப்புக்கழகம், மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறையுடனும் பிற தமிழ் அமைப்புகளுடனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி யிருந்தது. இது குறித்து மேலும் அறியத் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவனைச் சந்தித்தோம். அப்பொழுதுதான் இது சாதாரணமான கூட்டம் அல்ல! அபாயச்சங்கு ஒலிக்கப்பட்டுள்ளது எனப் புரிந்து கொண்டோம். அவரிடம் பேசிய விவரம் வருமாறு: தமிழுக்கான…
தொல்காப்பியரின் காலத்தை அறிவிக்க வேண்டும்! – ஆரா
தமிழின் தொன்மையை மீட்க ஒரு கோரிக்கை – இலக்குவனார் திருவள்ளுவன் உலகின் தொன்மையான முதல் மொழியான தமிழில் கிடைத்துள்ள முதல் நூல் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம்.தமிழர்களின் வாழ்வியல், முதல்மொழியாம் தமிழின் இலக்கணம் என்று சொல்லும் தொல்காப்பியரின் காலத்தை முன்னிறுத்தி விவாதங்கள் சூடாகியிருக்கின்றன. தாவரங்களுக்கு உயிர் உண்டு எனக் கண்டறிந்ததைத் தொல்காப்பியர், தம் முன்னோர் கூறியதாகக் கூறி இருப்பார். தொல்காப்பியருக்கும் முன்னோரே இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால் தமிழரின் மதிநுட்பத்திற்கு வேறு சான்று தேவையில்லை. இப்படிப்பட்ட தொல்காப்பியரை,, தமிழகம் முழுமையான அளவில் முக்கியபத்துவப்படுத்தவில்லை…
சேதுத்திட்டம்: தமிழக அரசின் செயல் ஏற்புடையதல்ல – வாசன்
சேதுக்கால்வாய்த்திட்டம்: தமிழக அரசின் வழக்காவண உறுதிமொழி ஏற்புடையதல்ல – மத்திய அமைச்சர் வாசன் தூத்துக்குடி: “சேதுக்கால்வாய்த்திட்டத்தினைச் செயல்படுத்துவதில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்த உறுதியுரை ஆவணம் சரியானதல்ல,” என மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார். மேலும்,. இது நாட்டின்ம் தென்தமிழகத்திற்கும் ஊறு நேர்விக்கும். இத்திட்டத்தினைச் செயல்படுத்த காலத்தாழ்ச்சியை ஏற்படுத்தும். என்றும் மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார்.