சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (நிறைவு) செ.வை. சண்முகம்
மையக்கருத்துரை (கார்த்திகை 28, 2045 / 14 திசம்பர் 2014 தொடர்ச்சி) 5.2. இறைச்சி தொல்காப்பியர் இறைச்சியைப் பொருளியலில் மூன்று சூத்திரங்களில் (35 – 37) விளக்கியுள்ளார். ‘இறைச்சிதானேஉரிப்/பொருட்புறத்ததுவே’ என்பது முதல் சூத்திரம். அதில் உரி/ பொருள் என்ற இரண்டு பாடம் காணப்படுகிறது. இங்கு ‘உரிப்பொருள்’ என்ற பாடம் கொண்டால் அதுவும் மனிதவாழ்க்கை (உரி) ஆனது. கருப்பொருள், முதல்பொருள் (உரிப்புறத்தது) ஆகியவற்றால் தாக்கம்பெறும் என்று ஆகும். ‘அன்புறுதகுந இறைச்சியுட் சுட்டலும் வன்புறையாகும் வருந்திய பொழுதே’ (பொருளியல்…
சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) செ.வை. சண்முகம்
(கார்த்திகை 21 / திசம்பர் 7, 2014 இதழின் தொடர்ச்சி) மையக்கருத்துரை 5. கூடுதல் பொருள் கருப்பொருள், உள்ளுறை, இறைச்சி என்ற இரண்டு நிலையில் கூடுதல் பொருள் உணர்த்துவதாகத் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். இலக்கியத்தில் இறைச்சியில் முதலும் கூடுதல் பொருள் உணர்த்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது (சண்முகம், 2009: 13, 2012: 300). 5. 1. உள்ளுறை கவிதையியல் நோக்கில் உவமையை உள்ளுறை உவமம், ஏனை உவமம் என வகுக்கும் சூத்திரத்திலேயே ( அகத்திணை 46 ) ‘தள்ளாதாகும் திணைஉணர் வகையே’ என்று…
சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம்
(நவம்பர் 23, 2014 இன் தொடர்ச்சி) மையக்கருத்துரை 4. தொல்காப்பியர் நோக்கு தொல்காப்பியரே சுற்றுச்சூழல் திறனாய்வுக்கு முன்னோடி எனலாம். அது இரண்டு நிலையில் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது.1. பலரும் எடுத்துக் காட்டும் முதல்,கரு, உரி என்ற பாகுபாடு, 2. அவருடைய உள்ளுறை, இறைச்சி என்ற கருத்தமைவுகள் மூலம் புலனாகும் சுற்றுச் சூழல் திறனாய்வு கருத்துகள். 4.1.முதல், கரு, உரி ‘முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறை சிறந்த னவே பாடலுள் பயின்றவை நாடுங்…
சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் – செ.வை. சண்முகம்
மையக்கருத்துரை கார்த்திகை 7, 2045 / நவம்பர் 23, 2014 இதழின் தொடர்ச்சி 4.1.1.முதலும் கருவும் ‘ஞாயிறுபட்ட அகல்வாய் வானத்து அளியதாமே கொடுஞ் சிறைப் பறவை இறையுற வாங்கிய நெறியயல் மராஅத்து பிள்ளை உள்வாய்ச் செரீஅய இரைகொண்ட மையின் விரையுமாற் செலவே’ ( குறுந். 92). இங்கு முதலும் ( முதலடி) கருவும் ( ஏனைய அடிகள்) மட்டுமே அமைந்துள்ளன. புலவர் தாமோதரனார். காமமிக்கக் கழிபடர் கிளவியாற் பொழுது கண்டு சொல்லியது என்பது பிற்குறிப்பு….
சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் – செ.வை. சண்முகம்
மையக்கருத்துரை முன்னுரை சங்க இலக்கியத்தில் சூழ் என்ற வினை சூழ்ந்திருத்தல் (surrounding), படர்தல் (spreading), ஆராய்தல் (deliberation), கருதுதல் (intention), ஆலோசித்தல் (consultation) என்று ஒருசொல்பலபொருளாகப் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது (அகநானூறு , பார்க்க, சுப்பிரமணியன் 1972 ) . சூழல் என்ற தொழில்பெயர் பரிபாடலில் (‘புடை வரு சூழல்’ 19. 20 ௦) பயின்றுள்ளது. ‘சுற்றமாச் சூழ்ந்துவிடும்’ ( 475) என்பது திருக்குறள் வழக்கு. இங்குச் சூழ்ந்திருத்தல் என்ற பொருளே பொருந்தும். அது பல பொருள் ஒரு சொல்லாக இருப்பதால், சுற்றுச்சூழல்…