சொற்களஞ்சியம் சுரதா! – வெள்ளையாம்பட்டு சுந்தரம்
(சொல்லாக்க நெடு வழியில். . . தொடர்ச்சி) சொற்களஞ்சியம் சுரதா! நம் தமிழகத்தில் தோன்றிய கவிஞர்கள் பலராவர். செய்யுள்கள் மட்டும் யாத்தவர் சிலர் உரைநடையும் எழுதியோர் பலர். உரைநடையில் நாடகம், கட்டுரை, கதைகள் எழுதியோர் சிலர். பக்தி, சீர்திருத்தம், நாட்டு நலன் எனப் பல்வேறு துறைகளில் ஈடுபட்டோரும் உண்டு. வரலாறு, ஆய்வு எனும் ஆர்வமுடையோரும் உண்டு. பாரதியார், பாரதிதாசன், சுத்தானந்த பாரதியார், கவிமணி, கம்பதாசன், வாணிதாசன், முடியரசன், தமிழ்ஒளி, கண்ணதாசன் போன்றோர் பல துறைகளில் கால் பதித்ததை இலக்கிய வரலாறு காட்டுகிறது. இவ்வரிசையில் சுரதா…
சொல்லாக்க நெடு வழியில். . . . இராம. குருநாதன்
சொல்லாக்க நெடு வழியில். . . . கவிஞர் சுரதாவின் தமிழ்ச்சொல்லாக்க நூலின் முன்னுரை புதுப்புது தேடல்களை ஆர்வத்தோடு எல்லாத் துறைகளிலும் ஈடுபாட்டோடு அணுகும்போது பழைய சுவடுகளையும் நினைத்துப் பார்ப்பது ஒருவகையில் ஆர்வத்தைக் கிளறச் செய்யும். இந்த மலரும் நினைவுகள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். பழைய திரைப்படப் பாடல்களில் மனம் பதித்து அதிலேயே பற்றுக்கொண்டிருப்பவர்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இப்படிப்பட்ட உணர்வை, உவமைக் கவிஞர் சுரதா, பழைய நூல்களிலிருந்து திரட்டி வைத்திருந்த அரிய சொல்லாக்கங்களைச் சுவைபடத் தொகுத்ததன் மூலம் தந்திருக்கிறார். தமிழின் சொற்பொருள் வரலாற்றைக், குறிப்பாக,…