‘இலெமுரியா அறக்கட்டளை’ யின் முப்பெரு விழா, மும்பை
‘இலெமுரியா அறக்கட்டளை’ யின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் முப்பெரு விழா எதிர்வரும் ஆடி 07, 2048 / 23/7/2017 ஞாயிறு காலை 9.30 மணிக்கு மும்பை சிவாசி பூங்காவிலுள்ள வீர்சாவர்க்கர் அரங்கில் நடைபெற உள்ளது. தமிழ், தமிழர் நலன், பண்பாட்டு விழுமியங்களின் தொடர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்தி நிகழ்த்தப்படும் விழாவாகும் இது. சேது.சொக்கலிங்கம் இ.ஆ.ப. தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் அறிவியலறிஞர் மயில்சாமி அண்ணாதுரை முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறேன். குமணராசன்.