‘பல்லக்குத் தூக்கி’ – 1100 பக்கங்கள் கொண்ட வரலாற்றுப் புதினம்
‘பல்லக்குத் தூக்கி’ – 1100 பக்கங்கள் கொண்ட வரலாற்றுப் புதினம் கவிஞர் வேணு குணசேகரன் படைப்பில் 3 பாகங்கள் கொண்ட 1100 பக்கங்களில் களப்பிரர், முத்தரையர் கால ஆட்சிப் பின்னணியில் மன்பதை நீதிக்கான வரலாற்றுப் புதினம் பல்லக்குத் தூக்கி பல்லக்குத்தூக்கி நூல் வெளியீட்டின் முன்பதிவுத் திட்டம் நல்ல தாள், நேர்த்தியான அச்சு, உறுதியான கட்டமைப்பு, அத்தியாயங்களில் அழகிய ஓவியங்கள், 1/8 அளவில் ஏறத்தாழ 1100 பக்கங்கள் கொண்ட இந் நூலின் விலை உரூபாய் 1200/- ஆகும். முன்பதிவின் விலை: 5 படிகளுக்கு உரூபாய்…
புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 2/2 – சொருணபாரதி
(புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 1/2 தொடர்ச்சி) புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 2/2 அத்துடன், தான் பார்த்த ஆலயங்கள், சுற்றுலாத் தளங்கள், புத்த மடாலயங்கள் ஆகியவற்றையும் விவரிக்கிறார். பசுமந்தான் அருள்மிகு வரதராசப் பெருமாள் கோவிலுக்குச் செல்கிறார். அது மட்டுமில்லாமல், அந்தக் கோவிலை வழங்கிய திருவரங்கம்இராசா இராமநாத(ரெட்டியா)ர்பற்றிய குறிப்பையும் தருவதோடு, அவர்தம் கொள்ளுப்பேரன் வாசுவைச் சந்தித்ததையும் குறிப்பிடுகிறார். அதோடு மட்டுமின்றி, கோவிலில் தட்டில் போடப்படும் காசைக் கூட அருட்சுனைஞர் (அர்ச்சகர்) எடுத்து உண்டியலில் போட்டு விடுவதைப் பற்றியும், கவனிப்புடன் சொல்கிறார். கம்பையில் ஒரு…
புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 1/2 – சொருணபாரதி
புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 1/2 நெருப்புக் கோளமான கதிரவனிலிருந்து உடைந்த துண்டின் பயணம் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் பூமியாக உருவெடுத்தது. பூமிப்பந்தின் பல நூறாயிரம்(இலட்சம்) ஆண்டுகளின் பயணம் உயிர்களை உருவாக்கியது. உயிர்களின் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் பயணம் மனிதனை உருவாக்கியது. மனிதனின் வாழ்க்கையும் ஒரு பயணம்தான்! பயணம் பட்டறிவுப் புதையலைக் கண்டெடுக்கும் அகழாய்வு; அறிவைச் சுரக்கும் பள்ளதாக்கு. பயணம் மனிதர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பயணங்கள் பல கண்டங்களைக் கண்டுபிடித்தன. பல பயணங்கள் நாடுகளைக் கண்டுபிடித்தன. பல பயணங்கள் புதிய…