தோழர் தியாகு எழுதுகிறார் 48: சொல்லடிப்போம், வாங்க! (6)
(தோழர் தியாகு எழுதுகிறார் 47 தொடர்ச்சி) சொல்லடிப்போம், வாங்க! (6) பேராசிரியர் சிவகுமார் எழுதுகிறார்: தோழர் வணக்கம். என்னுடைய மின்னஞ்சல் செய்திக் குவியலால் இயங்கவில்லை. சிலவற்றை நீக்கியபின் உங்கள் தாழி மடல்கள் பெற முடிந்தன. ‘சொல்லடிப்போம்’ வாங்க இரசித்துப் படிக்கிறேன். தாராளியம் சிறப்பான விளக்கம். நீண்ட கட்டுரைகளைத் தவிருங்கள். நல்லது. சுருக்கமாகவே எழுத முயல்கிறேன். பேராசிரியர் சிவக்குமார் கலைச் சொல்லாக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சொல்லடிக்கும் பணியில் அவரும் தொடர்ந்து பங்கேற்க வேண்டுகிறேன். தாழி மடல் எடுத்துள்ள பணிகளில் சொல்லாக்கமும் ஒன்று. எனக்கு விருப்பமானது என்பதால் மட்டுமல்ல,…
தோழர் தியாகு எழுதுகிறார் 44: சொல்லடிப்போம் வாங்க! (5)
(தோழர்தியாகுஎழுதுகிறார் 43 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (5) தாழி அன்பர் பொன்முருகு கவின்முருகு கேட்கிறார்: குற்றாய்வு என்ற சொல் விமர்சனம் என்பதற்கான தமிழ்ச் சொல்லா? ஆமாங்க. விமர்சனம் என்பதில் இரு வகையுண்டு: (1) திறனாய்வு [review] (2) குற்றாய்வு [criticism]. Criticism and self-criticism = குற்றாய்வும் தற்குற்றாய்வும். இன்னுஞ் சிறந்த மாற்று இருப்பின் அன்பர்கள் எழுதலாம். நவ-தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்ற சிக்கலில் நவ-தாராளவாதம் ஒழிந்து, தாராளியமா? தாராளவியமா? தாராளிகமா? என்ற சிக்கல் மட்டும் தொடர்கிறது. அறிஞர்தம் கருத்துக்காகக் காத்துள்ளேன். இந்தச் சிக்கலை முடித்துக் கொண்டு தாராளியத்தின்…
தோழர் தியாகு எழுதுகிறார் 43: சொல்லடிப்போம் வாங்க! (4)
(தோழர் தியாகு எழுதுகிறார் 42 தொடர்ச்சி சொல்லடிப்போம் வாங்க! (4) இனிய அன்பர்களே! பெங்களூருவிலிருந்து எழுதுகிறேன். விடியுமுன் வந்து சேர்ந்து விட்டேன். இன்று (04.12.2022, திருவள்ளுவராண்டு 2053, கார்த்திகை 18, ஞாயிறு) மாலை கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் நடத்தும் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வில் பேசுவதற்காக வந்துள்ளேன். விழா நடக்கும் இடம் பெங்களூரு தமிழ்ச் சங்கம். அழகிய அல்சூர் ஏரிக்கரையில் தமிழ்ச் சங்க வாயிலில் பொன்னிறச் சிலை வடிவில் திருவள்ளுவர் அமர்ந்துள்ளார். கன்னட இன வெறியர்களின் எதிர்ப்பால் பல காலம் சாக்குச் சுற்றி வைக்கப்பட்டிருந்த சிலைதான் இது. இந்தச் சிலையைத்…
தோழர் தியாகு எழுதுகிறார் 41: சொல்லடிப்போம் வாங்க! (2)
(தோழர் தியாகு எழுதுகிறார் 40 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (2) நவ-தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்ற சிக்கல் குறித்து மேலும் சில பார்வைகள்: தாராளியம் என்ற சொல்லாக்கம் குறித்து அன்பர் இலக்குவனார் திருவள்ளுவன் எழுதுகிறார்: புது + ஆண்டு = புத்தாண்டு. ஏனெனில் புத் என்பது முன்னொட்டு. ஆனால் பொது + ஆண்டு பொத்தாண்டு என வராது. தாராளம் என்பது தள் → தரு → தார்+ஆளம் = தாராளம். எனவே, இந்த இடத்தில் ஆளம் என்பதைப் பிரித்து ஆள் + இயம் என்பது இடராக உள்ளது. எனினும் தாளியம் என்னும் சொல்லோசைக்கிணங்க இருப்பதால் தாராளியம் என்பதைப் பயன்படுத்தி…
தோழர் தியாகு எழுதுகிறார் 36 : சொல்லடிப்போம், வாங்க!
(தோழர் தியாகு எழுதுகிறார் 35 தொடர்ச்சி) சொல்லடிப்போம், வாங்க! கலைச் சொல்லாக்கம் என்பது அறிவியல் கல்விக்கு இன்றிய மையாதது. இயற்கை அறிவியல் ஆனாலும் குமுக அறிவியல் ஆனாலும் கலைச் சொற்களைத் தவிர்த்துப் பயிலவோ பாடம் சொல்லவோ முடியாது. ஒவ்வொரு மொழியும் அடிப்படையான ஒரு சொற்களஞ்சியத்தைக் கொண்டு இயங்குகிறது. சொற்களஞ்சியத்தின் செழுமை மொழிவளத்தைப் புலப்படுத்தும். ஆனால் எவ்வளவுதான் வளம்பொருந்திய மொழி என்றாலும் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கப் புதிய சொற்கள் வார்க்க வேண்டிய தேவை எழுந்தே தீரும். அப்படிச் செய்யும் போது அந்தந்த மொழிக்கும் உரிய…