வள்ளுவர் சொல்லமுதம் 10 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும் 2
(வள்ளுவர் சொல்லமுதம் 9 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும்-தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்அத்தியாயம் 5. சொல்லும் செயலும் பின் பகுதி இங்ஙனம் நால்வகை வன்சொற்களைக் கடிந்து பேசிய கவிஞர்பெருமானாகிய திருவள்ளுவர், எவரிடத்தும் இன்பத்தைப் பெருக்கும் இன்சொல்லையே பேசுக என்று வேண்டுவார். அதுவே துன்பத்தை மிகுவிக்கும் வறுமையைத் தொலைப்பதாகும். இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தருவதாகும். இன்சொல் கூறுவானின் பாவங்கள் குறைந்து தேயும். புண்ணியங்கள் வளர்ந்து பெருகும். இவ்வாறு பன்னலம் விளக்கும் இன்சொல்லே தனக்கும் இன்பம் தருவதை அறிந்த ஒருவன் என்ன கருதி…
வள்ளுவர் சொல்லமுதம் 9 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும்
(வள்ளுவர் சொல்லமுதம் 8 : அ. க. நவநீத கிருட்டிணன் : விருந்தும் மருந்தும் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்அத்தியாயம் 5. சொல்லும் செயலும் மக்கள் உள்ளத்தே உருவாகும் எண்ணங்கள். சொற்களாக வெளிப்படுகின்றன. உறுதியான எண்ணங்கள் செயல்களாக உருவடைகின்றன. உள்ளத் துய்மையை உண்மை என்பர். வாயால் சொல்லும் சொற்களின் தூய்மையை வாய்மை என்பர். மெய் யால் செய்யும் செயல்களின் தூய்மையை மெய்ம்மை என்பர். இங்ஙனம் உண்மை, வாய்மை, மெய்ம்மை என வழங்கும் மூன்று சொற்களும் சான்ருேரின் ஆன்றமைந்த அரிய பண்புகளை விளக்குவனவாகும். வடமொழியில் வழங்கும்…