ழகரம் தமிழின் சிகரம்
ழகரம் ழகரம் ழகரம் ழகரம் தமிழின் சிகரம் என்று உணர வேண்டிய நேரம் (ழகரம்) தமிழைத் ‘தமிழ்’ என்றே சொல்வீர் ழகரம் மாற்றித் ‘‘தமில்’’ ‘‘தமிளென்று’’ பேசும் வழக்கம் தவிர்ப்பீர் (ழகரம்) ‘‘கல்’’ எஎறு சொன்னால் கற்றல் ‘‘கள்’’ என்று அதனைச் சொல்வது தவறு கள் என்றால் போதை நீரே (ழகரம்) கல்வியைத் தருமிடம் ‘‘பள்ளி’’ ‘‘பல்லி’’ என்றால் அச்சொல் குறிக்கும் சுவரில் ஓடும் பல்லி (ழகரம்) ‘‘அழகு’’ எனும் சொல் அழகு ‘‘அலகு’’ என்று சொல்வது தவறு பறவையின் மூக்கே அலகு (ழகரம்)…
‘‘தாய்மொழி விழிப்புணர்வு’’ – கவிஞர் சொ.நா.எழிலரசு
தமிழே குறி குறளே நெறி தமிழா! அறி தமிழுக்கு முதல் அகரம் தனிச்சிறப்பு ழகரம் ழகரம் பேசு சிகரந் தொடும் பேச்சு பிழையாகப் பேசாதே களையெனத் தழைக்காதே தமிழுடன் ஆங்கிலம் சோற்றுடன் கல் நீக்கிடு தனித்தமிழ் பேசு தமிழே நம் மூச்சு தமிழ்ப் பேசா வாய் தாங்கிடும் மெய் பொய் தமிழ் வாழ வாழ் தவறினால் தமிழ் பாழ் ‘‘ழகரமாமணி’’ கவிஞர் சொ.நா.எழிலரசு செயலர், பொதுச்செயலர், தனித்தமிழ்ப் பயிற்றகம், தமிழ் ழகரப்பணி மன்றம், துரைப்பாக்கம், சென்னை.