துலுக்கப்பயலே! 3 – வைகை அனிசு
(அகரமுதல 95, ஆவணி 20, 2046 / செப். 06, 2015 தொடர்ச்சி) 3 சோனகர் சோனகர் என்பாரை ஆங்கிலத்தில் மூர்சு / moors என்று அழைக்கின்றனர். இசுபெயினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்தது இசுலாமியம்(கி.பி.711-1492). இக்காலக் கட்டத்தில் ஐரோப்பா முதலான மேற்கு நாடுகளில் இசுலாம் முதன்மை பெறுவதற்குக் காரணம் இசுலாமியர்களுடைய கல்வி தொடர்பான நாட்டமும் கலை ஈடுபாடுமே! அரேபியரும் வேறு சில இனத்தவரும் சோனகர்/ moors என அழைக்கப்பட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கர்கள், பேபர்சு இன மக்கள் ஆகியோரையும் இவ்வாறே அழைக்கிறார்கள். ‘இசுபெயினி்ல் சோனகர்’ (The…