இராகுலுக்கு வாழ்த்துகள்! ஆனால் …… இலக்குவனார் திருவள்ளுவன்
இராகுலுக்கு வாழ்த்துகள்! ஆனால் …… இந்தியத் தேசியப் பேராயத்தின் எண்பத்தேழாவது தலைவராகப் பொறுப்பேற்றுள்ள இராகுலுக்கு வாழ்த்துகள்! 1885 இல் தொடங்கப்பெற்ற பேராயக்கட்சியில் 1919 இல் 36 ஆம் தலைவராகப் பொறுப்பெற்றார் மோதிலால் நேரு. இவருக்குப்பின் 100 ஆண்டுகளை நெருங்கும் இந்த ஆண்டில் இக்குடும்பத்தின் 6ஆவது வழிமுறையினராக, இக்கட்சியின் 87 ஆம் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் இராகுல்(காந்தி); ஆள் எண்ணிக்கை அடிப்படையில் 6 ஆவது வரிசைமுறை என்றாலும் (சவகர்லால் நேரு 8 தடவை தலைவர் பொறுப்பேற்றதுபோல்) பதவிஆண்டு வரிசையில் குடும்பத்தில் 44ஆம் வரிசையில் பொறுப்பேற்றுள்ளார். அஃதாவது 132…
மத்தியத் தலைவரானார் தாலின்! முன்மொழியுநராக மாறுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
மத்தியத் தலைவரானார் தாலின்! முன்மொழியுநராக மாறுக! தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள்/ அவரது சட்டமன்றப் பணி மணி விழா, தி.மு.க.வால் நடத்தப்பட்டுள்ளது. செயல்தலைவர் தாலின்(இசுடாலின்/ஃச்டாலின்) அனைத்து இந்தியத் தலைவர்களை அழைத்துச் சிறப்பாக நடத்தியுள்ளார். விழாவில் கனிமொழிக்கு முதன்மை அளிக்காததன் காரணம், விழாவின் பெருமையில் யாரும் பங்கு போடக்கூடாது என்ற எண்ணம்தான். அவர் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும்வரை இந்த எண்ணம் இருக்கும். எனவே, இதனை அரசியல் அடிப்படையில் தவறாகக் கருத இயலாது. மேடையில் தமிழகக் கூட்டணித் தலைவர்களை மேடையேற்றாததன் காரணம்…
நான் சாப்பிடும் உணவில் நச்சு மாத்திரை கலக்கப்பட்டது! – நளினியின் சிறைச் சித்திரவதைகள்!
4 நான் சாப்பிடும் உணவில் நச்சு மாத்திரை கலக்கப்பட்டது! – நளினியின் சிறைச் சித்திரவதைகள்! ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் இராசீவு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நளினி எழுதியிருக்கும் நூலின் நான்காவது பகுதி இது. நான் சொன்னதை மிக அமைதியாக, அதே கூர்மையான பார்வையோடு கவனித்தபடியே இருந்தார் பிரியங்கா. தேவை என்றால் மட்டுமே கேள்வி கேட்டார். அப்பொழுதுதான் எனக்கொரு மன உறுத்தல் ஏற்பட்டது. என்னைப்பற்றியும் என் கணவரைப் பற்றியும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறேனே, என்…
பெறுமதியான பங்காளியா இலங்கை? – புகழேந்தி தங்கராசு
பெறுமதியான பங்காளியா இலங்கை? வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விலங்குகளை வேட்டையாடுவது போலத் தமிழர்களை விரட்டி விரட்டிக் கொன்று குவித்த பிறகு, மகிந்த இராசபக்ச கூசாமல் பேசிய சொற்களில் ஒன்று – ‘மீள்குடியேற்றம்’. 2009 முதல் 2014 வரை மகிந்தன் பயன்படுத்திய அந்தப் பித்தலாட்ட சொல், இப்போது மைத்திரியின் வசம். ஆறே மாதத்தில் தமிழர்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விடுவார்கள் -என்று இப்போது அவர் சோதிடம் சொல்வது, தமிழர்களையும் பன்னாட்டு சமூகத்தையும் எப்படியாவது ஏமாற்றியாக வேண்டும் என்கிற எண்ணத்தின் விளைவு. இப்போது…
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! -முனைவர் மறைமலை இலக்குவனார்
’இந்திய இறையாண்மை’ இதுதான் துன்பக் கடலில் தத்தளிக்கும் இந்திய மீனவர்கள் வலைவீசிப் பிடிக்கும் சிங்களப் படையினர் பிடிபட்டால் சிறைவாசம் தப்பிக்கமுயன்றால் துப்பாக்கிச் சூடு வேடிக்கை பார்ப்பதற்குக் கடலோரத்தில் காவற்படை! எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான் என்று புரிந்துகொள்ளுங்கள்! அரசியற்சட்ட அமைப்பில் அறிந்தேற்புப் பெற்றவை அட்டவணைப் படுத்தப்பட்டவை இருபத்துமூன்று மொழிகள்! அந்த வாய்ப்பும் அற்றவை பல நூறுமொழிகள்! ஆட்சி புரியும் நல்வாய்ப்பு ஒரே ஒரு மொழிக்குத்தான்! தொன்மையான மொழிகள் இரண்டே இரண்டு கொண்டாடுவதற்குச் சமற்கிருதம் திண்டாடுவதற்குத் தமிழ்! எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான்…