தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்யாத வரையில் தன்னிலையில் உயர்வர் ! – கருவூறார்
தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்யாத வரையில் தன்னிலையில் உயர்வர் ! எவனொருவன் தமிழ் மொழியைத் திருத்தமாகவும், அழகாகவும், இனிமையாகவும் பேசுகிறானோ, அவனே உன்மையான இறைமைப் பணி புரிபவனாவான். எவனொருவன், பிறரைத் திருத்தமாகவும், அழகாகவும், இனிமையாகவும் பேசுவதில் ஆர்வமும் ஆற்றலும் பெற்றிடுமாறு செய்கின்றானோ, அவனே, சிறந்த பூசைகளைச் செய்கிறவனாவான். எவனொருவன் நற்றமிழ் இலக்கியங்களைப் பிறர் நனி விரும்பிக் கேட்குமளவு எடுத்துச் சொல்லுகின்றானோ, அவனே நல்ல தவத்தைச் செய்கிறவனாவான். எவனொருவன் நற்றமிழால் நாடியனைத்தையும் பெறலாம்; தேடுவதனைத்தையும் பெறலாம்….. என்பதைச் செயலால் மெய்ப்படுத்திக் காட்டி வாழுகின்றானோ, அவனே பிறர் தொழத்தகும்…