gnalathamizhthaay01

தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்யாத வரையில் தன்னிலையில் உயர்வர் !

எவனொருவன் தமிழ் மொழியைத் திருத்தமாகவும், அழகாகவும், இனிமையாகவும் பேசுகிறானோ, அவனே உன்மையான இறைமைப் பணி புரிபவனாவான்.

எவனொருவன், பிறரைத் திருத்தமாகவும், அழகாகவும், இனிமையாகவும் பேசுவதில் ஆர்வமும் ஆற்றலும் பெற்றிடுமாறு செய்கின்றானோ, அவனே, சிறந்த பூசைகளைச் செய்கிறவனாவான்.

எவனொருவன் நற்றமிழ் இலக்கியங்களைப் பிறர் நனி விரும்பிக் கேட்குமளவு எடுத்துச் சொல்லுகின்றானோ, அவனே நல்ல தவத்தைச் செய்கிறவனாவான்.

எவனொருவன் நற்றமிழால் நாடியனைத்தையும் பெறலாம்; தேடுவதனைத்தையும் பெறலாம்….. என்பதைச் செயலால் மெய்ப்படுத்திக் காட்டி வாழுகின்றானோ, அவனே பிறர் தொழத்தகும் தேவ நிலைகளைப் பெறுகிறான்.

தமிழ்ப் புலவன், கவிஞன், அறிஞன், சிந்தனையாளன், கலைஞன், சொல்வல்லான், பாடகன், ஆடுமகன்…. முதலியோரனைவரும் தமிழ்மொழிக்கு வஞ்சகம் – இரண்டகம் – துரோகம் செய்யாத வரையில் தன்னிலையில் உயர்வர், உய்வு பெறுவர், பிறர் வணங்கும் நிலையினைப் பெறுவர். இவர்களில் எவராயினும், தமிழ்மொழிப் பற்றில் எள் முனையளவு மாற்றம் கொளினும் மலையளவு தாழ்ச்சியும் வீழ்ச்சியும் பெற்று இகழ்ச்சியுறுவர் என்று பதினெண் சித்தர்கள் கூறுகிறார்கள்.

ஞாலகுரு, ஞானாச்சாரியார், கருவூறார்.
‘அன்பு சித்தர்’

gnalaguruchithar01