அறப்போராளி தாவீது (டேவிட்) ஐயாவுக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி   ஈழ விடுதலைப் போராட்டத்தைக் குறை கூறும் எல்லோரும் கேட்கும் முதன்மையான கேள்விகளுள் ஒன்று, “அவர்கள் என்ன காந்தி போல அறவழியிலா போராடினார்கள்? ஆயுதம் ஏந்தியவர்கள்தானே!” என்பது.   காலமெல்லாம் எழுப்பப்பட்டு வந்த, வருகிற இந்தக் கேள்விக்கான வாழும் விடையாக நடமாடிக் கொண்டிருந்த காந்தியம் தாவீது(டேவிட்) ஐயா கடந்த ஐப்பசி 24 [௧௧-௧௦-௨௦௧௫ (11.10.2015)] அன்று நம் தமிழுலகை விட்டு மறைந்தார்.   ஈழத் தமிழ் மக்களால் ‘டேவிட் ஐயா’ என…