தங்கர்பச்சானின் ‘சொல்லத்தோணுது’ நூல் வெளியீடு

  பங்குனி 13, 2047 / மார்ச்சு 26, 2015 காலை 10.30 வெளியீடு:  உ.சகாயம் இ.ஆ.ப. பெறுநர்:  மேனாள் நீதிபதி சந்துரு   ஆண்டு முழுவதும் நான்  தமிழ் ‘தி இந்து’ நாளிதழில் எழுதிய அரசியல்,சமூகக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா;  தங்கள் வருகை எனக்கு மகிழ்வைத்தரும். மிக்க நன்றி! -தங்கர்பச்சான்

ஆதித்தனார் விருது பெற்ற தங்கர் பச்சான் கதைகள் – அறிமுகம்

பகிர்தல்   எப்படி எனக்கு எல்லாத் திரைப்படங்களையும் பார்க்கப் பிடிக்காதோ அப்படித்தான் எல்லா எழுத்துகளையும் படிக்க முடிவதில்லை. போர் மூண்டு விட்டது. இனி வாளினை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை எனும்போதுதான் அரசனும் வாள் எடுப்பானாம். அதுபோலத்தான் பேனாவை கையில் எடுத்து வெற்றுத்தாளின் மேல் கையைப் பதிக்க வேண்டிய கட்டாயமும் அவசியமும் ஏற் பட்டால் ஒழிய என்னால் எழுதவே முடிவதில்லை.  பல காலங்களில் பல்வேறுபட்ட மனநிலைகளில் எழுதப்பட்ட இந்தக் கதைகளை மொத்தமாக ஒருசேர ஒரே மனநிலையில் படித்துப் பார்க்கின்றபோது இதுவரை எனக்குத் தோன்றாத எத்தனையோ…

தினத்தந்தி தமிழர்களின் சொத்து – தங்கர் பச்சான்

    சி.பா.ஆதித்தனார் 111-வது பிறந்தநாள் மற்றும் இலக்கிய பரிசளிப்பு விழா நேற்று மாலை ராணி சீதை மன்றத்தில் நடந்தது.   சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசு உரூ.2 இலட்சம் ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்காகப் பெற்ற தங்கர்பச்சான் ஏற்புரையாற்றினார். அப்பொழுது பின்வருமாறு தெரிவித்தார்:   இலக்கியப் பரிசுகளும், விருதுகளும் இலக்கியத் தரத்தை உயர்த்துவதற்காகத் தரப்படுகின்றன என்பதைவிட இலக்கியவாதிகளை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்காகவே தரப்படுவதாக உணர்கிறேன். திரைப்படத் துறையைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் என் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வது இலக்கியத்தின் வழியாகத்தான். திரைப்படப் படைப்பாற்றலுக்காக எனக்கு…

தமிழனுக்குச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் – வெ. இராமசுப்பிரமணியன்

  90 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழனுக்குச் சிறுதொழில், தன்முன்னேற்றம்பற்றிச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் என்று உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் புகழாரம் சூட்டினார்.   சி.பா.ஆதித்தனாரின் 111-ஆவது பிறந்தநாள் இலக்கியப் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் ஆற்றிய தலைமையுரை வருமாறு:- தமிழனின் அடையாளம்     73 ஆண்டுகளாகத் தமிழர்களின் அடையாளமாகவும், பத்திரிகைத் துறையில் அருந்திறல் புரிந்தும் ‘தினத்தந்தி’ வந்து கொண்டிருக்கிறது. ஒரு நிறுவனம் வெற்றி பெற வேண்டுமானால் பொதுவாக அதற்கு நல்ல நேரம் இருக்க…

பெருங்கவிக்கோ, தங்கர் பச்சான் ஆகியோருக்கு – சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசுகள்

‘  தினத்தந்தி’ நிறுவனர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவாக, ஆண்டு தோறும் அவருடைய பிறந்தநாளையொட்டி இலக்கியப்பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு  ‘சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழ்அறிஞர் விருது’, ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமனுக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப்பட்டயத்துடன்  உரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சி.பா. ஆதித்தனார் இலக்கியப்பரிசை ‘‘கலைமாமணி’’ தங்கர்பச்சான் பெறுகிறார்.  தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு (உரூ.2 லட்சம்) இவருடைய ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்குவழங்கப்படுகிறது. புரட்டாசி 10,  2046 / செப். 27, 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை…

கண்ணுக்குத்தெரியும் கடவுள்கள் – தங்கர்பச்சான்

  நாட்டில் உள்ளத் துறைகளிலேயே முதன்மையானதாகக் கருதப்படுவது ஊடகத்துறை. மக்களாட்சியில் வாழ்கின்ற மக்களுக்கு வழிகாட்டுவதுடன் சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய பொறுப்பும் கடமையும் அவற்றுக்கு உண்டு. நாம் தேர்ந்தெடுத்த அரசு நமக்கு அரணாக இருக்க வேண்டியதுபோல் ஊடகங்களும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அரணாக இருக்க வேண்டும். கற்றவர்களும் பாமரர்களும் நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள ஊடகங்களையே நம்பி இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்து கொண்டு வருவதுபோல் ஊடகங்களின் மீதும் இழந்து வருவது பெரும் கவலைக்குரியது. சமூகத்தின் சீர்கேடுகளை அலசும் ஊடகங்கள் தாங்கள் வழி…

அப்பா வேண்டுமா? இலவசங்கள் வேண்டுமா? – தங்கர்பச்சான்

அப்பா வேண்டுமா? இலவசங்கள் வேண்டுமா? – தங்கர்பச்சான் அப்பாதான் வேண்டும் – சிறார்   ஊரைவிட்டுத் துரத்துவதற்காகவும், பிரிப்பதற்காகவுமே பள்ளிக்கூடங்கள். அதைச் சிறப்பாகச் செய்து தருவதுதான் சிறந்த பள்ளி. உடன் பயின்றவர்களைப் பின்னாளில் காணாமலே போக நேரிடுகிறது. நடுவில் சேர்ந்துகொண்டவர்களோடு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியைத் திருப்பித் தருவதற்குக் கடந்துபோன பள்ளி நாட்களாலும் இழந்த காதலி, காதலனாலும் மட்டுமே முடியும்.  ‘பள்ளிக்கூடம்’ திரைப்படத்துக்குப் பின் ஏராளமான பள்ளிகளுக்கு நான் செல்ல நேர்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மட்டும், ஒரே ஆண்டில் 60 பள்ளி, கல்லூரிகளுக்குச்…

தமிழ்த்தேசச் சூழலியல் மாநாடு

அன்பான தோழருக்கு வணக்கம்!  சிதம்பரத்தில் வரும் பங்குனி 24, 2046 / ஏப்பிரல் 7 செவ்வாய் அன்று நடைபெறவுள்ள “தமிழ்த்தேசச் சூழலியல் மாநாட்டில்” கலந்து கொள்ளவும், மாநாட்டு அழைப்பிதழை தங்கள் நண்பர்கள், சுற்றத்தாருடன் பகிர்ந்து கொள்ளவும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்! தங்கள் முகநூல் பக்கங்களில், மாநாடு குறித்துத் தாங்கள் எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும்!  நன்றி! தோழமையுடன், க.அருணபாரதி தலைமைச் செயற்குழு உறுப்பினர், பேசி:  9841949462 தலைமைச் செயலகம், தமிழ்த் தேசியப் பேரியக்கம்  பேசி: 7667077075, 9047162164 ஊடகம்: www.kannotam.com இணையம்: tamizhdesiyam.com  

அடங்கா வெறி! – தங்கர்பச்சான்

 எங்கே போகிறது மன்பதை?   பெண்களை இழிவுப்படுத்துவதும், அடிமைப்படுத்துவதும் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. பண்பாட்டில் சிக்குண்டு எல்லா வற்றுக்கும் பலியாவது பெண்கள் சமுதாயம்தான். தவறுகளை யார் செய்தாலும் எல்லாமும் அவர்கள் தலையிலேயே விழும்.   செய்தித்தாள்களில் நாள்தோறும் தவறாமல் இடம்பெறும் ஒரே செய்தி பாலியல் குற்றங்களும், வன்முறைகளும்தான். படிக்கவே பதறுகிற செய்திகள், காதில் கேட்கவே பிடிக்காத அருவருப்பான செயல்பாடுகள். இவை எல்லாம் சமுதாயத்தை எதிர்காலத்தில் எங்கே போய்க் கொண்டுவிடும் எனத் தெரியவே இல்லை.   நகரம், சிற்றூர் என்றில்லாமல் தொடரும் இந்தக் கொடுஞ்செயல்கள்,…