தங்குமிடம் அளிப்போரே! தமிழுக்கும் தங்குமிடம் தாருங்கள்! (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 12) – இலக்குவனார் திருவள்ளுவன்
தங்குமிடம் அளிப்போரே! தமிழுக்கும் தங்குமிடம் தாருங்கள்! (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 12) (“சுவை உணவு தருவோரே சுவைத்தமிழையும் தாரீர்!” தொடர்ச்சி) முந்தைய கட்டுரையில் சுவை உணவு தருவோர், சுவைத்தமிழையும் தர வேண்டுமாய் வேண்டியிருந்தோம். அதற்கு முன்னர் “உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்” என எழுதியிருந்தோம். இரண்டின் தொடர்ச்சிதான் இக்கட்டுரையும். தமிழ் நாட்டிலுள்ள உறைவகங்கள் – தங்கும் விடுதிகள் – தமிழருக்கானவை யல்ல என அதன் உரிமையாளர்கள் கருதுகின்றனர் போலும். ஆனால், 7% இற்கும் குறைவானவர்களே அயல்நாட்டினராக இங்கு வருகின்றனர். அனைவருமே ஆங்கிலேயர்கள் எனச்…