திரைத்துறையினரின் தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 20 (இதழ்கள் மூலமான தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  19-இன் தொடர்ச்சி) மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள துறை திரைத்துறை. திரைத்துறையின் மூலம் நல்லனவும் ஆக்கலாம்; அல்லனவும் புரியலாம். திரைப்படங்களைப் பார்த்துத் திருந்தியவர்களும் உண்டு; தன்னம்பிக்கை பெற்றவர்களும் உண்டு; சீரழிந்தவர்களும் உண்டு. கலை மக்களுக்காகத்தான். அப்படியானால் திரைக்கலை என்பது மக்கள் வளர்ச்சிகானதாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய திரைக்கலை என்பது மக்களை, மக்களின் மொழியை அழிப்பதற்கான வேலைகளில்…