தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் முனைவர் க.தமிழமல்லன்! வாகை மாலை அணிவிப்பீர்!
புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மொத்தம் 8 பேர் போட்டி இடுகின்றனர். அவர்களுள் கால்பந்து சின்னத்தில் தனியராக முனைவர் க.தமிழமல்லன் போட்டியிடுகிறார். அவரது தேர்தல் அறிக்கை வருமாறு: அனைவரும் வாழ்க! அனைவரும் உயர்க! முனைவர் க.தமிழமல்லன் சிறந்த வேட்பாளர்! முனைவர் க.தமிழமல்லன் தமிழ்ஆசிரியர் (ஓ) , பாவலர், இதழ்ஆசிரியர், தனித்தமிழ்இயக்கத் தலைவர். அவர் ஒழுக்கம் உடையவர். நேர்மையானவர். துாய்மையானவர். முனைவர் க.தமிழமல்லன்! சிறந்த அறிஞர், உயர்கல்வி கற்றவர், பல நுால்களை இயற்றியவர். வெல்லும் துாயதமிழ் என்னும் மாத இதழை 26 ஆண்டுகளாக…
திருக்குறள் முற்றோதல், தட்டாஞ்சாவடி
திருக்குறள் முற்றோதல், தட்டாஞ்சாவடி புதுவைத் திருக்குறள் மன்றமும் தனித்தமிழ்இயக்கமும் இணைந்து திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியைத் தட்டாஞ்சாவடி சமரசசன்மார்க்க சங்கத்தில் நடத்தின. தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தலைமைதாங்கிப் பேசினார். புதிமத்தின் தலைவர் சுந்தரஇலட்சுமிநாராயணன் முற்றோதலைத் தொடங்கி வைத்தார். அறத்துப்பாலின் 38 அதிகாரங்கள் படிக்கப்பட்டன. ஒருவர் சொல்ல மற்றவர் அதைத் தொடர்ந்து சொல்லித் திருக்குறள் படிக்கும் வாய்ப்பை மகிழ்வுடன் பயன்படுத்திக் கொண்டனர். இராசாராம்,பாலசுந்தரம், கடலுார் பா.மொ.பாற்கரன், வெல்லும் துாயதமிழ் ஆசிரியர் த.தமிழ்ச்செல்வி, தமிழ்த்தென்றல், அரங்கநாதன், சமரசசுத்தசன்மார்க்க சாதனைச் சங்கத்தின் செயலர் கோவிந்தசாமி,…
தனித்தமிழ் இயக்கத்தின் சிலப்பதிகார விழா
ஆனி 16, 2046 / சூலை 01, 2015 தட்டாஞ்சாவடி