இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2. – நாரா.நாச்சியப்பன்
(இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 1. – தொடர்ச்சி) இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2. செல்லப் பாட்டி வெங்கட்டருடைய சிற்றன்னை கணவனை இழந்தவர். அவருக்குப் பிள்ளை கிடையாது. ஆகவே, இராமசாமியைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவளர்த்து வந்தார். சிறிய பாட்டியின் செல்லம் இராமசாமியை ஒரு முரடன் ஆக்கி விட்டது. பாட்டி வசதியில்லாதவர். ஆகவே, இராமசாமிக்குப் பழஞ்சோறும். சுண்டற்குழம்பும்தான் உணவாகக் கிடைக்கும். இராமசாமிக்கோ வடை, வேர்க்கடலை, பட்டாணி போன்ற தீனிகளில் ஆசை அதிகம். பாட்டியிடம் காசு கிடைக்காது. ஆகையால், ‘ஓசி‘ வாங்கியும்,…