அரங்கனின் குறள் ஒளி: 3. துன்பம் செய்தார்க்கும் இன்பம் செய்க!: -தொடர்ச்சி
அரங்கனின் குறள் ஒளி: 3. துன்பம் செய்தார்க்கும் இன்பம் செய்க!:1/2
தந்தை பெரியார் 141ஆவது – அறிஞர் அண்ணா 111ஆவது பிறந்தநாள் விழா
ஆவணி 28, 2050 சனிக்கிழமை 14.9.2019தஞ்சாவூர்: மாலை 5.00 – 8.30 மணி பெசண்ட்டு அரங்கம், தஞ்சாவூர் தந்தை பெரியார் 141ஆவது – அறிஞர் அண்ணா 111ஆவது பிறந்தநாள் விழா – செட்டம்பர் 21, 22 அமெரிக்காவில் நடைபெறும் பெரியார் பன்னாட்டு மாநாட்டில் பங்குபெறும் வழக்குரைஞர் சி.அமர்சிங்கு, அ.கலைச்செல்வி, மா.அழகிரிசாமி ஆகியோருக்குப் பாராட்டுவிழா வரவேற்புரை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்)தலைமை: வெ.செயராமன் (தஞ்சை மண்டலத் தலைவர்)முன்னிலை: இரா.செயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்),இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மு.ஐயனார் (தஞ்சை மண்டலச் செயலாளர்),அ.அருணகிரி (தஞ்சை…
புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-10
புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-10 புதுவை, தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம்பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதன் பத்தாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் மிதியடிபெற்றுமீள்படலம், தமிழகம் புகுபடலம் ஆகியவைபற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. செயலாளர் நெ.நடராசன் வரவேற்றுப் பேசினார். தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி அறிஞர் அண்ணாவின் படத்தைத்…
இராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை
புரட்டாசி 14, 2049 ஞாயிறு 30.09.2018 மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை புதுவைத் தமிழ்ச்சங்கம் படத்திறப்பு :பேரறிஞர் அண்ணா & தந்தை பெரியார் இராவணகாவியச் சொற்பொழிவு 10 : பொழிவாளர்: முனைவர் க.தமிழமல்லன் – பகுத்தறிவாளர் கழகம், புதுவை தமிழ்நாடு
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ) புரவலர் அண்ணல் சுப்பிரமணியனார் அவர்களைத் தலைவராகவும் பேராசிரியரைச் செயலராகவும் கொண்ட திருவள்ளுவர் கழகம் அமைக்கப்பெற்றது. அண்ணலாரால் வள்ளுவர் பதிப்பகம் நிறுவப்பட்டுப் பேராசிரியரின் ‘திருக்குறள் எளிய பொழிப்புரை’, ‘எல்லோரும் இந்நாட்டரசர்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. பின்னர், நூல் வெளியீட்டுப்பணி தொடர்ந்து, ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’, ‘பழந்தமிழ்’, ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்’ முதலான நூல்களும் வெளியிடப்பட்டன. திருக்குறள் கழகம் மூலம் பேராசிரியர் திருக்குறள் சொற்பொழிவுகள் நடத்தியதற்குப் பெரிதும் வரவேற்பு இருந்தது. இது குறித்துப்…
ஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா! ஒருவர் தன் கொள்கையை அல்லது கருத்தை மாற்றிக் கொண்ட பின்னர் முன்னர் அவர் சொன்னதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக்கூடாது. சான்றாகத் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி இறை மறுப்பாளர் என்ற முறையில்தான் உலகறியப்பட்டவர். ஆனால், தொடக்கத்தில் அவர் சாமியாராகத் திரிந்ததை வைத்துக்கொண்டு அவரை இறைஏற்பாளர் என்ற அளவில் மதிப்பிடலாமா? கூடாதல்லவா? அதுபோல்தான் மேனாள் முதல்வர் செயலலிதா தமிழ்ஈழம் குறித்தும் விடுதலைப்புலிகள் குறித்தும் தமிழ்க்கேடர்களின் கருத்தாக்கத்தால் முதலில் தவறான நிலைப்பாடு எடுத்திருந்தார். சட்ட மன்றத்திலும் மேதகு பிரபாகரனைக்…
மறக்க முடியுமா? – புலவர் குழந்தை: எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? – புலவர் குழந்தை அறிவில் முதிர்ச்சி, உணர்வில் முதிர்ச்சி, புலமையில் முதிர்ச்சி, பாக்களைப் புனைவதில் முதிர்ச்சி-ஆனால், பெயர் மட்டும் குழந்தை! புலவர் குழந்தை, ஈரோடு நகரத்திற்கு அருகில் ‘ஒல வலசு’ என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். தாயார் சின்னம்மை, தந்தை முத்துசாமி. ஆனி 18, 1937 / 1906ஆம் ஆண்டு சூலை 1ஆம் நாள் பிறந்த இவரின் கல்வி, திண்ணையில் தொடங்கி, 1937ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டம் பெறுவதில் போய் நின்றது. இவரின் வாழ்க்கை ஆசிரியர் பணியில்…
தன்னையே எரித்து வெளிச்சம் தந்த பெரியார் – சுப.வீ.
தன்னையே எரித்து வெளிச்சம் தந்த பெரியார்! விளக்கை ஏற்றி வெளிச்சம் தந்தவர்கள் உண்டு நீயோ உன்னையே எரித்து வெளிச்சம் தந்தாய்! எங்களுக்கு நீதான் எழுதவும் படிக்கவும் அடித்தளமிட்டாய்! நாங்களோ இன்னும் நன்றி சொல்லவே கற்றுக்கொள்ளவில்லை! எங்களுக்காகவே நீ வாழ்ந்தாய்! மன்னித்துவிடு தந்தையே! நாங்களும் எங்களுக்காவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! – சுப.வீ. சுப.வீ.வலைப்பூ http://subavee-blog.blogspot.in/2012/04/blog-post_983.html
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை: திருக்குறள் ஆராய்ச்சி 5/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6 பொருளியலிலும் நாட்டியல் ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் (திருக்குறள் 463) இக்குறளுக்குப் பொருள்சார் விளக்கம் மட்டும் தராமல், ‘‘பிறர் நாட்டை அடிமைப்படுத்தச் சென்று தம் நாட்டை இழந்த செயல்கள் வரலாறுகளில் நிறைய உள’’ [18] எனப் புதுமையாக நாட்டாசை அடிப்படையிலும் விளக்குகிறார். பேராசிரியரின் திருவள்ளுவர் கால ஆராய்ச்சி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பிற அறிஞர்கள்…
ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 8/9 – பெங்களூரு முத்துச்செல்வன்
(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 7/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 8/9 தாம் தமிழை விரும்புவதற்கான காரணங்களைத் தந்தை பெரியார் அடுக்கும்போதே, மொழி குறித்துக் கருத்தறிவிப்பது மொழியின் தத்துவத்திலுள்ள தன்னுடைய ஆசை மிகுதியின் பொருட்டே ஆகுமே தவிர, “நான் கூறப்போகும் தத்துவங்களை இலக்கண, இலக்கிய ஆதாரங்களுடன் விளக்குவது என்பது எனது தகுதிக்கு மேற்பட்ட காரியம். அதற்கு வேண்டிய இலக்கண இலக்கியங்களில் பாண்டித்தியமோ, ஆராய்ச்சியோ எனக்கில்லை. எனக்குத் தோன்றிய, என் பட்டறிவுக்கு எட்டிய செய்திகளைத்தான் நான் உங்களுக்கு…
ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 7/9 : பெங்களூரு முத்துச்செல்வன்
(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 6/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 7/9 2014 இல் பா.ச.க. பதவியேற்றபோது அதன் உறுப்பினர்கள் இந்தியில் உறுதிமொழி கூறியதையும் சிலர் சமற்கிருதத்தில் உறுதிமொழி கூறியதையும் காணமுடிந்தது. அப்போது மோடி, தான் பிற நாட்டுத் தலைவர்களுடன் உரையாடும்போதும் இந்தியிலேயே உரையாடப்போவதாக அறிவித்ததையும் அறிவோம். அரசு இயக்கும் சமூக வலைத்தளங்களில் இந்தியே இடம் பெற வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் (CBSE) பள்ளிகளில் சமற்கிருதக் கிழமை(வாரம்) கொண்டாடப்பட வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டது….