வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 8. தன்னை யறிதல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 7. தொடர்ச்சி) 8 தன்னை யறிதல் 71.தன்னை யறித றலைப்படுங் கல்வி. தன்னை அறிந்து கொள்வதே முதன்மையான கல்வி ஆகும். மனிதரி லுடம்பு மனமான் மாவுள. மனிதரில் உடல், மனம், ஆன்மா ஆகியவை உள்ளன. தோன்முதற் பலவின் றொகுதிகா ணுடம்பு. காணுகின்ற இந்த உடல் என்பது தோல் முதலிய பலவற்றின் தொகுதி ஆகும். உடம்பெலா நிற்கு முயரறி வுரன்மனம். உடல் எல்லாம் பரவி நிற்கும் உயர்ந்த அறிவின் சக்தி மனம் ஆகும். உடம்பு மனமுமா ளுயரறி வான்மா. உடலையும்…