(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 7. தொடர்ச்சி)

தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram8

  1. தன்னை யறிதல்

 

71.தன்னை யறித றலைப்படுங் கல்வி.

தன்னை அறிந்து கொள்வதே முதன்மையான கல்வி ஆகும்.

  1. மனிதரி லுடம்பு மனமான் மாவுள.

மனிதரில் உடல், மனம், ஆன்மா ஆகியவை உள்ளன.

  1. தோன்முதற் பலவின் றொகுதிகா ணுடம்பு.

காணுகின்ற இந்த உடல் என்பது தோல் முதலிய பலவற்றின் தொகுதி ஆகும்.

  1. உடம்பெலா நிற்கு முயரறி வுரன்மனம்.

உடல் எல்லாம் பரவி நிற்கும் உயர்ந்த அறிவின் சக்தி மனம் ஆகும்.

  1. உடம்பு மனமுமா ளுயரறி வான்மா.

உடலையும் மனத்தையும் ஆளுகின்ற உயர் அறிவு ஆன்மா ஆகும்.

  1. ஆன்மா மனமுட றான்றன் வலிதனு.

நமது வலிமை என்பது நம் ஆன்மா, மனம், உடல் ஆகியவை ஆகும்.

  1. மெய்ம்முத லியமனன் வெளிச்செலும் வாயில்.

மனம் தன்னை மெய் முதலிய ஐம்பொறிகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறது.

  1. உடன்மனத் தின்பி னோடு மியலது.

உடல் மனத்தைப் பின்பற்றும் இயல்பு உடையது.

  1. மனமற வறநெறி மருவு மியலது.

மனம் நல்வழி, தீயவழி இரண்டையும் சார்ந்திருக்கும் இயல்பு உடையது.

  1. ஆன்மா மனத்தை யறநெறி யுய்ப்பது.

ஆன்மா மனத்தை நல்வழியில் செலுத்துகிறது.

 

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

 

 

வ.உ.சிதம்பரனார்