புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.36-1.7.41
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.31-1.7.35 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் 36. தந்துவைத்த வொருபொருளைத் தான்கொள்ளு மாறேபோல் வந்தடுத்துத் தீயாழி வாய்க்கொண்டு போயதன்பின் இந்திரத்தை யினிதாண்டன் றிருந்தபெருந் தமிழ்ச்சோழன் செந்தமிழின் மணங்கமழுந் திராவிடம்புக் கிருந்தனனே. 37. பூண்டசுவை யதுகண்ட பூனையுறி யுறிதாகத் தாண்டுமெனு முதுமொழியோற் றமிழ்சுவைத்த பாழ்ங்கடலும் ஆண்டெழுநூ றதன்முன்ன ரரைகுறையா வுள்ளதுங்கொண் டீண்டுள்ள வளவினநாட் டிடஞ்சுருங்கச் செய்ததுவே. 38. எத்தனையோ வகப்பொருணூ…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.31-1.7.35
(இராவண காவியம்: 1.7.26 – 1.7.30தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் ஷ வேறு வண்ணம் 31. குஞ்சோ ரைந்தின் மூன்றொழியக் கோலென் றலறுங் குருகேபோல் வஞ்சாய் நீயுன் பொருளிழந்து மண்மே டாவா யென்றலற அஞ்சா தக்கா ராழிபினும் ஐந்நூற் றோடீ ராயிரத்தே எஞ்சா நின்ற பெருவளத்தோ டிந்திரப் பேரின் றாக்கியதே. 32. அந்தோ முன்போற் றமிழ்மக்க ளானார் வடபா லடைவாகிக் கொந்தார் கானக் குலமுண்டு கொழுதே யடிமைக் குடியாக நந்தா…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.26 – 1.7.30
(இராவண காவியம்: 1.7.21 -1.7.25. தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் துணையா நின்ற மறவோரைத் துணையாக் கொண்டே யுடனாகிஇணையா நின்ற முன்னோனுக் கெதிரா வருமா கொடியோர்போல்அணியா நின்ற வணிகொண்டவ் வன்னைக் கெதிரா வவ்வணியேபுணையா வந்த பாழ்ங்கடலே பொன்றா யோநீ யின்றோடே. 27. நன்றே பழகித் துணைசெய்யும் நல்லோர் போல நலஞ்செய்தே ஒன்றார் போலப் பாழ்ங்கடலே உயிர்கொண் டொழிந்தா யோகெடுவாய் என்றே புலம்பித் தமிழ்மக்கள் இடம்விட் டகலா விடரெய்தித் தன்றா யிழந்த கன்றேபோல் தம்மூ ரிழந்து தவித்தாரே. 28.அன்னை புலம்பத்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.21 -1.7.25
(இராவண காவியம்: 1.7.16 -1.7.20. தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் ஷெ வேறு வண்ணம் 21. யாழுங் குழலும் பலபறையும் யாழோ ராடு மாடரங்கும் போழும் பனையே டுந்தோய்ந்த பொதிபொ தியான தமிழ்நூலும் வாழும் பொருளும் நிலபுலமும் மனையோ டினவும் வாய்க்கொண்ட பாழுங் கடலே. நீயொருநாட் பாழாய்ப் போகக் காணேமோ. 22. வாரா யெனவே கைகோத்து மலர்வாய் மோந்து முத்தாடிச் சீராய் வளர்த்த கோத்தாயின் சீரைக் குலைக்கச் சினந்துவரும் …
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.16 -1.7.20
(இராவண காவியம்: 1.7.11 -1.7.15 தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் கழகமோ டமர்ந்து தென்னர் கனிதமி ழாய்ந்தாய்ந் தன்னார்வழிவழி புகழின் வாழ வறிதுபார்த் திருத்தல் நம்மோர்க்கழகல வெனவே பாழு மலைகடல் கழகத் தாங்குப்பழகவே யேற்ற காலம் பாத்துமே யிருந்த தம்மா. நல்லவ ருறவை நாடி நணித்துவந் தணித்தா யன்னார் இல்லிடத் திருந்த ளாவி யின்புறு மறிஞர் போலச் சொல்லிடத் தினிய வின்பந் தோய்தமி ழுறவை நாடிப் புல்லியே யளவ ளாவப் பொருகடல் நினைத்த தம்மா. எண்டிசை யவாவு மின்பத் தியைந்துகட்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.11 -1.7.15.
(இராவண காவியம்: 1.7.6 -1.7.10. தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் 11. கேட்டிடிற் காதுக் கின்பம் கிளந்திடின் நாவுக் கின்பம் ஊட்டிடி னுளத்துக் கின்பம் உணர்ந்திடி னுணர்வுக் கின்பம் பாட்டுரை நடையிற் செல்லும் பழந்தமிழ்ப் பாவாய் நீதான் வீட்டிலா வின்ப மானால் விரும்பிடார் யார்தான் சொல்லாய். 12. அஎன வாயங் காக்கின் அன்னையுன் புலனா றைந்தும் முக்கனி தேன்பால் கண்டும் முகஞ்சுழித் தினைந்தே யொல்கப் புக்கெழீ யியல்பா யின்பம்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.6 -1.7.10.
(இராவண காவியம்: 1.7.1-1.7.5. தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் 6. பொருவள மின்றியே புகல டைந்தெனப் பெருவள மிக்கதன் பெயரின் மேம்படும் ஒருவள நாட்டினை யுண்டு வந்திடத் திருவுளங் கொண்டதத் தீய வாழியும். 7. அவ்வள நாட்டினும் அரிய தாகவே குவ்வளத் தமிழர்கள் கொண்டு போற்றிடும் இவ்வுல கத்திலா வினிமை மிக்கிடும் செவ்விய தமிழுணத் தேர்ந்த வக்கடல். 8. இனிமையி னுருவினள் இயற்கை வாழ்வினள் …
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.1-1.7.5.
(இராவண காவியம்: 1.6.41- 1.6.43 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் 1. இங்ஙனம் பல்சிறப் பியைந்து பல்வள முங்கியே செந்தமிழ் மொழியை யோம்பியே தங்களுக் கரசர்கள் தாங்க ளாகவே மங்கலம் பொருந்திட வாழ்ந்து வந்தனர். 2. இவ்வகை வாழ்கையி லினிது போற்றிடும் செவ்வியர் பொருளினைத் தீயர் நன்றென வவ்வுத லுலகியல் வழக்கம் போலவே கவ்வைநீர் வேலையுங் கருத்துட் கொண்டதால். 3. அல்லது வழியிற்கேட் பாரற்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.41- 1.6.43
(இராவண காவியம்: 1.6.36- 1.6.40 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 41. தகையுற வத்தமிழ்ச் சங்கந் தங்கினோர் வகையுறப் புலவர்கள் வகுத்த பாக்களைத் தொகையுறச் செய்துநூல் தொகுத்து மோதியும் திகழுற வாய்ந்தநேர் செய்து வந்தனர். 42. முத்தமி ழாய்தர முறையி னாக்கிய அத்தமிழ்ச் சங்கமவ் வண்ணல் பின்னரும் வைத்ததம் முன்னவர் வழியைப் பின்றொடர்ந் தொத்தினி தோம்பிட வோங்கி வந்ததே. 43. அந்நிலை யிருந்தநம் அருமைத்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.36- 1.6.40
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.31- 1.6.35 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் கூட்டிய புலவரைக் குமரி நாட்டிடைநாட்டிய தமிழ்க்கொடி நுடங்கு நாளவைக்கோட்டியி லவரவர் கொணர்ந்த பாக்களைஏட்டிடை யிருந்தரங் கேற்றி னானரோ. அண்ணிய புலவர்பே ரவையிற் றங்கள்பாக்கண்ணிய வுட்பொருட் கருத்தைப் பேரவைஉண்ணியே யுடன்பட வுரைத்துத் தம்முளத்தெண்ணிய படியரங் கேற்றி னானரோ.
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.31 – 1.6.35
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.27 – 1.6.30 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் தாய்க்கொலை புரிந்தவர் தமிழ்க்கொலை புரிந்தாராய்க்கொலை புரிந்தவட வாரியரின் மானச்சேய்க்குண மிலாதவிழி தீயரை யொறுத்தேதாய்க்குநிக ராகிய தமிழ்மொழி வளர்த்தார். கழகம் – மேற்படி வேறு வண்ணம் +++++ சேய்க்குணம் – தாயைப் பேணுங் குணம். 32. கல் – மலை. 33. புலக்கண் அறிவுக்கண். அலகு உறு – அளவுபட்ட, பகுதிப் பட்ட அது, அகம் புறம் +++++ இராவண காவியம் –…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.27 – 1.6.30
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.23- 1.6.26 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் வாய்மொழி பொதிந்திடுசொன் மாலைபல வேய்ந்துதாய்மொழி வளர்த்திடு தமிழ்ப்புலவர் தம்மைஆய்மொழி புனைந்தில கரியணை யிருத்திப்போய்மொழி பெறாதிலகு பொன்முடி புனைவார். தேங்குபுகழ் தாங்கிய செழும்புலவர் கொள்ளஓங்குமுகில் தோய்முக டுயர்ந்தமலை யேறிஆங்கவர்கள் கண்டநில மானவை யனைத்தும்பாங்கொடு கொடுத்துயர் பசுந்தமிழ் வளர்த்தார். என்றுமுயர் செந்தமி ழியற்புலவர் கொள்ளக்கன்றினொடு தூங்கிவரு கைப்பிடி புணர்ந்தவென்றுகொடு வந்தவெறி வேழமது தந்துநன்றியொடு தொன்றுவரு நற்றமிழ் வளர்த்தார். மாணிழை புனைந்துமண வாமல ரணிந்தும்பாணரொடு கூடவரு பாடினியர்…