தமிழணங்கை வணங்குவோம் – சங்குப் புலவர்
தமிழணங்கை வணங்குவோம்! காதிலங்கு குண்டமாகக் குண்டலகே சியுமிடையே கலையாச் சாத்தன் ஓதுமணி மேகலையும் ஒளிர்கைவளை யாவளையா பதியும் மார்பின் மீதணிசிந் தாமணியாச் சிந்தாம ணியுங்காலில் வியன்சி லம்பாத் திதில்சிலப் பதிகார மும்புனைந்த தமிழணங்கைச் சிந்தை செய்வோம்! – சங்குப் புலவர்