மாற்றம் விரைவில் உண்டாகும்   தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு அவனே மாந்தன் முதலேடு அளித்தான் உலகப் பண்பாடு ஒன்றே குலமெனும் உயர்வோடு உரைத்தான் தெய்வம் ஒன்றென்று யாதும் ஊரே என்றுரைத்தான் யாவரும் கேளிர் என்றழைத்தான் அறமே வாழ்வின் நெறியென்றான் அருளே பொருளின் முதலென்றான் அன்பின் வழியது உலகென்றான் ஆசைப் பெருகின் அழிவென்றான் ஒழுக்க வாழ்வே உயர்வென்றான் அழுக்கா றின்றி வாழென்றான் ஒன்று பட்டால் வாழ்வென்றான் ஒற்றுமை இன்றேல் தாழ்வென்றான் பணிதல் யார்க்கும் நன்றென்றான் பகையே வாழ்வின் இருளென்றான் சினமே உயிர்க்குப்…