இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 2 : தமிழர் படைத்திறம்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 1 : தமிழ்க் கொடியேற்றம் – தொடர்ச்சி) தமிழர் வீரம்தமிழர் படைத்திறம் நாற்படைஅரசர்க்குரிய அங்கங்களுள் தலைசிறந்தது படை. படைத் திறத்தால் அரசன் உட்பகையை அழிப்பான்; புறப்பகையை ஒழிப்பான். முன்னாளில் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்னும் நாற்படையுமுடைய அரசன் மிகச் சிறந்தவனாக மதிக்கப் பெற்றான்.1 எல்லாப் படைகளுக்கும் மன்னனே மாபெருந் தலைவன்.யானைப் படைநால்வகைப் படைகளில் ஏற்றமும் தோற்றமும் வாய்ந்தது யானைப்படை. செருக்களத்தில் வீறுகொண்டு வெம்போர் விளைப்பதும், மாற்றார்க்குரிய மாட மதில்களைத் தாக்கித் தகர்ப்பதும் யானைப் படையே. அப்படைவீரர் யானையாட்கள்…